Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் தான் சேமிப்பு பழக்கத்தில் அதிகம் ஈடுபடுகின்றனர்
[11 - March - 2008] [Font Size - A - A - A]
* மகளிர் தின விழாவில் மக்கள் வங்கி முகாமையாளர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் கல்வித்துறையில் மட்டுமல்ல தலைமைத்துவத்திலும் இன்று உயர்நிலையை அடைந்துவருகின்றனர். எமது சமூகத்தில் பெண்கள் தான் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு சேமிப்புப் பழக்கத்தில் அதிகம் ஈடுபடுகின்றனர். வங்கிகளினால் அறிமுகப்படுத்தப்படும் சேமிப்புத் திட்டங்கள் ஒரு காலத்தில் ஆண்களே தமது சகோதரிகளுக்காகவும் தமது பிள்ளைகளுக்காகவும் சேமிப்புகளை ஆரம்பித்து வந்தனர். ஆனால், இன்று யாழ்ப்பாண சமூகத்தில் பாலியல் சமத்துவம் மேலோங்கியுள்ளதால், பெண்கள் உயர் நிலையையடைந்து, தமது சகோதரர்களின் நல்வாழ்வுக்காகவும் குடும்ப அங்கத்தவர்களுக்காகவும் சேமிப்பதில் அதிகம் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறு மக்கள் வங்கியின் வடபிராந்திய உதவிப் பொது முகாமையாளர் ரி.கே. ஆனந்தராஜா, மக்கள் வங்கியின் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி யாழ்ப்பாணம் ஸ்ரான்வீதி மக்கள் வங்கிக்கிளையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கிளை முகாமையாளர் சி. நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து பேசிய உதவிப் பொது முகாமையாளர் ஆனந்தராஜா; "இன்றைக்கு வங்கிகளில் சேமிப்பில் ஈடுபடுபவர்களின் தொகையிலும் பார்க்க கடன் பெறுவோரின் தொகை அதிகரித்து வருகின்றது. இது வங்கிகளுக்கு பிரச்சினையாக மாறிவருகின்றது. இதன் காரணமாக வங்கிகள் வாடிக்கையாளர்களை பாதிக்காமல் சில வரையறைகளை கொண்டுவரவுள்ளன.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வங்கி வறிய மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த பல வகையிலும் சிறிய கடன்களைக் கொடுத்து அவர்களை நல்லநிலைக்கு கொண்டுவர உதவியது. அப்போது வங்கிகள் இதனைச் செய்யக்கூடாது என பரிகாசம் செய்தவர்கள். ஆனால், இன்று எல்லா வங்கிகளுமே கருத்திட்டங்களுக்காக மக்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன.

அபிவிருத்தி என்பது வறிய மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி வறுமையைப் போக்குவதாகும். எம்மைப் பொறுத்தவரையில், மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு சேமிக்கிறார்களோ அவவை மக்களின் வாழ்வாதாரங்களைப் பெருக்கி நாட்டை அபிவிருத்தி செய்ய உதவும்.

மக்கள் வங்கி பெண்களுக்காக ஒவ்வொரு வருடமும் புதிய புதிய சேமிப்புத் திட்டங்களை அறிமுகம் செய்து அவர்களை சேமிப்பில் ஊக்குவித்து வருகின்றது. இன்று அறிமுகமாகியுள்ள "வனிதா வாசனாவ" நிலையான சேமிப்புச் சான்றிதழ் பரிசு எனும் சேமிப்புத் திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் பெண்கள் உயர்வடைந்து வருவதற்கு நல்ல சான்றாக நாம் கல்வி சாராத போட்டியொன்றை நடாத்தியபோது, இப்போட்டியில் ஐந்து பரிசுகளையும் பெண்கள் தான் சுவீகரித்துக் கொண்டனர்" என்றார்.

வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளர் திருமதி தர்சினி நிசாந்தன் உரையாற்றுகையில்; "சர்வதேச பெண்கள் தினத்தை அனுஷ்டிக்கும்போது அதற்கான கோட்பாடுகளையும் வரைவிலக்கணங்களையும் நன்கறிந்து எதிர்கொள்ளும் தடைகளை நீக்க வேண்டும்.

எமது பிரதேசத்தில் ஆண், பெண் சமத்துவம் மேலோங்கிவருகின்றது. குடும்ப வன்முறைகள் குறைக்கப்பட வேண்டும். பெண்கள் தமது திறமைகளையும் ஆற்றலையும் சமுதாய மேம்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் போது பெண் அடிமை நீங்கிவிடும்.

அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனம்விட்டுப் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட முடியாமல், மனத்திலே தேக்கி வைப்பதால், பொறாமையும் கோபமுமே வளர வாய்ப்புண்டு. எதையும்தாங்கும் இதயமாக நல்லதையே சிந்திக்க வேண்டும். உயர்ந்த குறிக்கோளுடன் வாழவேண்டும்" என்றார்.

வங்கி முகாமையாளர் சி. நித்தியானந்தன் தலைமையுரையாற்றுகையில்;

சர்வதேச மகளிர் தினம் மகளிர்களுக்கு மட்டும் உரியதல்ல. அது எல்லோருக்குமுரியது. பெண்கள் சமத்துவமாக வாழ ஆண்களது பங்களிப்பு அவசியம். பால்நிலை வேறுபாடுகள் இல்லாத சமுதாயம் உருவாகும்போது நாடு அபிவிருத்தி காணும்.

பெண்கள் சிக்கனமாக இருந்தால்தான் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எனவே, சேமிப்பு என்பது குடும்பத்தின் சுபிட்சம்" என்றார்.

மக்கள் வங்கியின் மாவட்ட முகாமையாளர் எஸ். ஹென்றி உரையாற்றுகையில்;

"வாடிக்கையாளர்கள்தான் வங்கியின் முதலீட்டாளர்கள். அவர்கள் சேமிக்கும் மனம் தான் வங்கியின் நலத்திட்டங்களுக்கு மூலதனமாகவுள்ளது. மக்களின் சேமிப்பு அதிகரிக்க நாட்டின் அபிவிருத்தியும் அதிகமாகும்" என்றார்.

Email this page Your Opinion Print this page
வாக்களிக்கவிடாமல் தடுத்த காட்டு யானைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு பாதுகாப்பு
வெள்ளவத்தை குண்டுவெடிப்பில் ஒருவர் பலி 4 மாணவர்கள் உட்பட 6 பேர் படுகாயம்
கோரளைப்பற்று, ஏறாவூர் பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பின் போது பல்வேறு முறைகேடுகள்
8 படையினர், 20 க்கு மேற்பட்ட புலிகள் வடபகுதி மோதல்களில் உயிரிழப்பு
3 ஆயிரம் குடும்பங்களை வலிகாமம் வடக்கில் உடனடியாக மீள் குடியேற்றுமாறு பணிப்பு
வடக்கு- கிழக்கில் இன்று டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்கமாட்டார்கள்
2005 நவம்பரில் செய்ததே நான் இழைத்த பெரும் பாவம்
பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த துரித நடவடிக்கை
`உலக நாடுகளில் ஆசியநாட்டுப் பெண்களே பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள்'
சட்டவிரோதமாக மீன்பிடிப்பதை தடுக்க வலியுறுத்தி கல்முனைக் குடியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இறக்குவானை, சூரியகந்தையில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு; பொலிஸ் காவலரண்கள் அமைக்க கோரிக்கை
அட்டம்பிட்டி வாகன விபத்தில் ஒருவர் பலி; ஐவர் படுகாயம்
ஊட்டியில் சுற்றுலா மையங்களை பார்வையிட்ட இலங்கை படை அதிகாரிகள்
உடல் வெப்பநிலை அதிகரிப்பு 11 மாதக் குழந்தை உயிரிழப்பு
எல்லராவ வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்
இலங்கைப் பெண்களின் திறமையை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோள்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் மரணம்
ஷ்ரீலங்கா ரெலிக்கொம்மிலுள்ள தனது பங்கை ஜப்பான் என்.ரி.ரி. மலேசிய நிறுவனத்துக்கு விற்கமுடியும்
ஜப்பான், இந்தியாவை விட இலங்கைக்கு அதிக உதவி வழங்கும் நாடாக சீனா
உலருணவு விநியோகத்தில் ஆறு மாத காலமாக தாமதம்
குடும்பஸ்தர், வாய்பேச முடியாதவர், சித்தசுவாதீனமற்றவர் கைதுகள் தொடர்பாக பிரதியமைச்சரிடம் முறையீடு
யுவதியை கடத்தியவர்கள் பொலிஸாரால் கைது
துப்பாக்கிச்சூட்டில் இரு புலிகள் பலி
கல்முனையில் மீனவர் சுட்டுக்கொலை அதிரடிப்படை வீரர் படுகாயம்
வருடப்பிறப்புக்கு முன்னதாக குறைந்த விலையில் காஸ்
அப்புத்தளையில் இராணுவத்தினர், பொலிஸார் திடீர் தேடுதல்; பத்துக்கும் மேற்பட்டோர் கைது
கிராமங்களைப் பாதுகாக்கவே சிவில் பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்படுகிறது
யாழ். மருத்துவபீட மாணவர்களுக்கு விடுதி அமைக்க காணி கொள்வனவு
அடிப்படை வசதிகளின்றி அவதியுறும் அக்கரப்பத்தனை பிரதேச மக்கள்
இத்தாலியில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூவர்
இலங்கை இலக்கிய பேரவை விருதுக்கு விண்ணப்பம் கோரல்
தகுதி, அர்ப்பணிப்பு நிறைந்த அதிபரின் நிர்வாகத்திலேயே பாடசாலை சாதனை படைக்கும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் தான் சேமிப்பு பழக்கத்தில் அதிகம் ஈடுபடுகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com