 |
| வெள்ளவத்தை குண்டு வெடிப்பில் பலியானவரின் சடலம் வீதியில் கிடப்பதையும் பாதுகாப்பு கடமையில் படையினர் ஈடுபட்டிருப்பதையும் காணலாம். |
|
|
|
 |
| துருக்கி அரசின் விசேட பிரதிநிதியாக, இலங்கைக்கான துருக்கி தூதுவர் எம்.பஹட்டின் குரோ சோஸ், பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கவை கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடுவதை இங்கு காணலாம். |
|
|
|
 |
| வன்னிப் பகுதியில் அண்மையில் கிளைமோர் தாக்குதலில் பலியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கி.சிவநேசனின் படுகொலை உட்பட தமிழ் எம்.பி.க்களின் படுகொலைகளைக் கண்டித்து நோர்வேயில் தமிழ் மக்கள் பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதையும் அதை இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவரான ஜோன் ஹன்சன் பௌர் பார்வையிடுவதையும் இங்கு காணலாம். |
|
|
|
 |
| அரசாங்கத்தின் சமாதான முன்னெடுப்புகளை மக்களுக்கு அறிவிக்கும் வகையில் மூன்று மாதங்களுக்கு ஓரு முறை வெளிவரும் சஞ்சிகை நேற்று திங்கட்கிழமை சமாதான செயலகம் வெளியிட்டுள்ளது. சஞ்சிகையை சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜேசிங்க வெளியிட்டு அது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிப்பதை இங்கு காணலாம். |
|
|
|
 |
| நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சராக பதவியேற்றிருக்கும் வி.புத்திரசிகாமணி நேற்று திங்கட்கிழமை அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். பிரதியமைச்சர் மணிக்குருக்கள் மற்றும் , அமைச்சர் சி.பி.இரத்நாயக்காவுடன் காணப்படுவதையும் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவிப்பதையும் சுபநேரத்தில் கடமையை அமைச்சில் ஆரம்பிப்பதையும் இங்கு காண்கிறீர்கள். |
|
|
|
 |
| பொரளையில் இலங்கை சேமிப்பு வங்கியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று வைபவ ரீதியாக திறந்துவைத்தார். இந்நிகழ்வில் பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். |
|
|
|
 |
| ஐ.தே.க., சு.க. மக்கள் பிரிவு இணைந்த தேசிய சபையானது தேசிய கொள்கையை வகுப்பதற்கான கலந்துரையாடலை நேற்று புதிய நகர சபை மண்டபத்தில் ஆரம்பித்தபோது எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர உட்பட எதிரணி முக்கியஸ்தர்கள் காணப்படுகின்றனர். |
|
|
|