Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
பங்களாதேஷுடனான முதல் ஒரு நாள் போட்டி தென் ஆபிரிக்க அணி அபார வெற்றி
[11 - March - 2008] [Font Size - A - A - A]
பங்களாதேஷுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆபிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கப்டன் ஸ்மித் சதமடித்தார்.

பங்களாதேஷில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆபிரிக்க அணி 2-0 என்ற டெஸ்ட் தொடரை வென்றது. இரு அணிகளுக்குமிடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று முன்தினம் சிட்டகொங்கில் நடந்தது.

நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் ஆடியது. தமிம், சித்திக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 30 ஓட்டங்களை எடுத்தது. சித்திக் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நபீஸ் 12 ஓட்டங்களில் நெல் பந்தில் ஆட்டமிழந்தார். இது, ஒரு நாள் போட்டிகளில் ஆன்ட்ரூ நெல் வீழ்த்தும் நூறாவது விக்கெட். கப்டன் அஷ்ரபுல் (8), சாகிப் (6) குறைந்த ஓட்டங்களில் வெளியேறினார்.

5 ஆவது விக்கெட்டுக்கு இக்பாலும், ஹசனும் 42 ஓட்டங்கள் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய இக்பால் 82 ஓட்டங்களில் ஹாரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி 3 விக்கெட்டுகள் 3 ஓட்டங்களுக்கு வீழ்ந்தன. இறுதியில் பங்களாதேஷ் அணி 48.2 ஓவர்களில் 178 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆபிரிக்கா சார்பில் நெல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலகுவான இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்காவுக்கு கிப்சும், கப்டன் ஸ்மித்தும் சேர்ந்து மிகச் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் எடுத்த நிலையில், கிப்ஸ் (57) ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்மித்துடன் ஆம்லா ஜோடி சேர்ந்தார். சாகிப்பின் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஸ்மித், ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 7 ஆவது சதத்தை நிறவு செய்ததுடன், வெற்றி இலக்கையும் எட்டினார்.

தென் ஆபிரிக்க அணி 36.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்கள் எடுத்து அபாரமாக வென்றது. கப்டன் ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் தென் ஆபிரிக்காவுடன் இதுவரை 9 போட்டிகளில் பங்களாதேஷ் விளையாடியுள்ளது. இதில் கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் வென்று அதிர்ச்சியளித்தது. மற்ற எல்லா போட்டிகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது.

Email this page Your Opinion Print this page
80 வருடங்களில் முதல் முறையாக இந்தியா ஒலிம்பிக் ஹொக்கிப் போட்டி வாய்ப்பை இழந்தது
ஓராண்டில் ஒருநாள் போட்டியில் 1,300 ஓட்டம் குவித்தேன் அணியில் இடம்பெற இதைவிட என்ன தகுதி தேவை?
பொன் அணிகளுக்கிடையிலான மோதல் வெற்றி - தோல்வியின்றி முடிவடைந்தது
அவுஸ்திரேலிய தொடர் குறித்து பேசக்கூடாது ஹர்பஜன் சிங்கிற்கு வாய்ப்பூட்டு
பங்களாதேஷுடனான முதல் ஒரு நாள் போட்டி தென் ஆபிரிக்க அணி அபார வெற்றி
ஹொலிபீல்ட் விளையாட்டு கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com