தனது வீட்டில் இரண்டு அறைகளை நெடுங்காலமாக வாடகைக்குக் கொடுத்துவந்த ஒருவர் இப்போது தனது மனதை மாற்றிக்கொண்டுள்ளார்.
பல குடும்பங்கள் அவரை அணுகி அறைகளை வாடகைக்கு அமர்த்தக் கேட்டபோது அவர் தான் விரும்பவில்லையென்று கையை விரித்துவிட்டார்.
இவரின் நண்பர் இவரைக் கடிந்துகொண்டார். "நல்ல வாடகைக்கு விடக்கூடிய அறைகளை வெறுமனே வைத்திருக்கிறீரே கூடுதலான வாடகையை எதிர்பார்க்கிறீரா?" என்று கேட்டதும் இவர் இல்லை எனத் தலையை அசைத்துவிட்டு இப்படிச் சொன்னார்.
"பொலிஸ் பதிவு, பொலிஸ் விசாரணை என்றெல்லாம் இழுபறிப்படுவதற்கு எனக்கு இஷ்டமில்லை. ஆகவே, வாடகையினால் வரும் வருமானத்தைப் பார்க்கிலும் எனது நிம்மதிதான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதனால்தான் தற்போதைக்கு அறைகளை வாடகைக்கு விடும் நோக்கமில்லை"
தொல்லையில்லாத வாழ்வே சொர்க்கம்!