ஐ.சி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் அகமதாபாத் ராக்கெட்ஸ் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) சார்பில், 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தப்போட்டியின் தொடக்க ஆட்டம் பஞ்ச்குலாவில் நடந்தது.
தொடக்க ஆட்டத்தில் அகமதாபாத் ராக்கெட்ஸ்-சண்டிகர் லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய அகமதாபாத் ராக்கெட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை எடுத்தது. ஹிண்ட்ஸ் 59 ஓட்டங்களும் டோல்புர் 54 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் 159 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சண்டிகர் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களை எடுத்தது. இதனால் அகமதாபாத் ராக்கெட்ஸ் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கிடையில் மும்பை சாம்ப்ஸ் அணியின் கப்டனான லாரா காயமடைந்திருப்பதால் அவருக்குப் பதிலாக நதன் ஆஸ்லே கப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.