மேற்கிந்திய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் சகலதுறை ஆட்டக்காரர் பர்வேஷ் மஹ்ரூப் இடம் பெறமாட்டாரெனத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கோணத் தொடரில் காயமடைந்த மஹ்ரூப் அதிலிருந்து குணமடைய மேலும் சில வாரங்கள் செல்லுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்தே மேற்கிந்தியாவுடன் நடைபெறும் இரு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் மஹ்ரூப் பங்குபற்றமாட்டாரென அணிநிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவர் சகல துறை ஆட்டக்காரராக இருக்கின்ற போதும் பந்து வீச்சை கருத்தில் கொண்டு இவருக்குப் பதிலாக சானக வெலகெதர அணியில் இடம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகும், இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் மஹ்ரூப் பங்கு பற்றுவாரென தெரிவிக்கப்படுகிறது.
மேற்இந்தியத் தொடருக்கான இலங்கை அணி இவ்வார பிற்பகுதியில் மேற்கிந்தியா செல்லவுள்ளது.