அவுஸ்திரேலிய தொடர் குறித்து இந்திய வீரர்கள் எதுவித கருத்தும் தெரிவிக்கக் கூடாதென இந்திய கிரிக்கெட் சபை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், சமீபத்தில் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தலைமை நிர்வாகி சுதர்லாண்ட் கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் இந்திய கிரிக்கெட் சபைக்கு ஈ-மெயில் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து இந்திய வீரர்கள் எவரும் கருத்துத் தெரிவிக்கக்கூடாது. அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் நிரஞ்சன் ஷா அறிவித்துள்ளார். இரு அணி வீரர்களும் ஐ.சி.சி.நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.