பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் படுகொலைக்கு பிரதான காரணியாக இருந்தவரெனக் குற்றம் சாட்டப்படுகின்ற தலிபான் அமைப்பின் தளபதி மெஹ்சூத்தைக் கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெனாசிர் பூட்டோவின் படுகொலை தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் ராவல்பிண்டி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கினை விசாரணை செய்த நீதிபதி கபீப்உர் ரஹ்மான் தலிபான் தளபதியை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்துள்ளார்.
மேலும், பெனாசிர் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைதாகியுள்ள ஐவருக்கும் தடுப்புக்காவலை இம்மாதம் 18 ஆம் திகதிவரை நீடிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.