அஞ்சல் மா அதிபர் பி.கே.எம். திசநாயக்கா இருநாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக யாழ். பிரதம தபாலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலிருந்து விமானம் மூலம் பலாலியை வந்தடையும் அஞ்சல் மாஅதிபர், அங்கிருந்து வாகனம் மூலம் யாழ். பிரதம தபாலகத்தை வந்தடைவார்
வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகப் பகுதிகளில் கடமையாற்றும் அஞ்சல் அதிபர்கள் அனைவரும் அஞ்சல் மா அதிபரை வரவேற்பதற்காக இன்று யாழ். பிரதம தபாலகத்தில் கூடவுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு வரும் இவர், யாழ். மாவட்டத்தில் தபால் சேவைகளை மேம்படுத்துவது, தபால் சேவைகளில் ஏற்படும் குறைகளை எங்ஙனம் நிவர்த்தி செய்வது என்பது குறித்து அஞ்சல் அதிபர்கள் மற்றும் ஊழியர்களுடன் விரிவாகக் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.