தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கத்தின் தாயார் திருமதி மீனாட்சி வீரகத்தியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செய்தி அனுப்பியுள்ளார்.
தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கத்தின் அன்புத் தாயார் காலமான செய்தி அறிந்து நான் மிகுந்த சோகத்திற்குள்ளானேன்.
அன்னாரின் இழப்பால் துயருறும் தனபாலசிங்கம், ஏனைய குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கிறேன் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.