மன்னாரில் நேற்று புதன்கிழமை காலை மூன்று இடங்களில் விமானப் படை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
மன்னாருக்கு வடக்கேயும் கிழக்கேயுமுள்ள விடுதலைப் புலிகளின் மூன்று முகாம்களின் மீதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் புலிகளின் மூன்று முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
மூன்றுக்கும் மேற்பட்ட குண்டுவீச்சு விமானங்களே பல தடவைகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.