Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இலங்கையிலிருந்து பணிப் பெண்களை அனுப்புவதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்
[13 - March - 2008] [Font Size - A - A - A]
எம்.ஏ.எம்.நிலாம்

வெளிநாடுகளுக்கு பணிப் பெண்களாக இலங்கையர்களை அனுப்புவதை இவ்வருடத்துடன் முடிவுக்குக் கொண்டுவருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

வெளிநாட்டவர்களின் அடுப்பங்கரை வேலைக்கும் துணி துவைக்கும் வேலைக்கும் எமது பெண்களை அனுப்பி நாட்டின் கௌரவத்தை விலைபேச வேண்டாமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து அமைச்சுகளினதும் செயலாளர்களது சந்திப்பின்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்ட உத்தரவை விடுத்திருக்கின்றார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் சகல அமைச்சுகளதும் செயலாளர்கள், பதில் செயலாளர்கள், அமைச்சு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இங்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

"வெளிநாட்டவர்களின் எடுபிடி வேலைக்கு எமது நாட்டு பெண்மணிகளை பணத்துக்கு ஆசைப்பட்டு அனுப்புவதை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை எமது மக்கள் உணர வேண்டும். தாதிமார்களாகவோ மருத்துவ உதவியார்களாகவோ பயிற்சிபெற்ற பெண்கள் நியாயமான சம்பள அடிப்படையில் வேலைக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கலாம்.

நாட்டின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படக்கூடிய விதத்திலேயே சமீபகாலமாக வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் எமது பெண்கள் அவமதிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட பின்னர் வெறுங்கையுடன் நாடு திரும்புவதைக் காண முடிகிறது. இந்த அவலம் தொடர இடமளிக்கக்கூடாது. எனவே, இவ்வாண்டு இறுதியுடன் பணிப் பெண்களாக இலங்கைப் பெண்கள் எவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது. டிசம்பர் 31 ஆம் திகதியுடன் அதற்குத் தடை போடப்பட வேண்டும்" எனவும் ஜனாதிபதி வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுச் சேவைகளுக்குச் செல்லும் அரச ஊழியர்களின் வெளிநாட்டுச் சேவைக் காலத்தை மூன்று வருடங்களுக்கு கட்டுப்படுத்துமாறும் மூன்று வருடம் முடிந்தும் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு அந்த இடங்களுக்கு புதியவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
இலங்கையிலிருந்து பணிப் பெண்களை அனுப்புவதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்
மட்டு. மாநகர சபையை வசமாக்க வேண்டிய தேவையால் த.ம.வி.பு.வுடன் அரசு கூட்டு
மன்னாரில் 3 இடங்களில் கடும் விமானத் தாக்குதல்
ஜனாதிபதியின் அனுதாப செய்தி
`முற்று முழுதாக ஆயுத முனையில் வாக்களிப்பு' தேர்தல் செயலகம் முன் ஐ.தே.க. ஆர்ப்பாட்டம்
புத்தளம் இறால் மடுக்கிராமத்தில் இளம் தமிழ் தம்பதி சுட்டுக்கொலை
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 2 பொலிஸார், ஊர்காவலர் இடைநிறுத்தம்
மட்டு. உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஜனநாயகத்தை அழிக்கும் செயற்பாடு
இமாமுடனான சந்திப்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரபாகரன்
நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வியூகம் வகுப்பதாக கிழக்கு மாகாண தேர்தல் அமையும்
மன்னார் வீதி புனரமைப்பு பணியிலீடுபடும் மூவர் கொழும்பிலிருந்து வந்த பொலிஸாரால் கைது
பொகவந்தலாவை கொட்டியாகலை தோட்டத்தில் குளவிகள் அட்டகாசம்; சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதி
புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியினை மேம்படுத்த பணிப்பாளர் நடவடிக்கை
பெரும்பான்மையினர் மத்தியில் வாழும் தமிழ் மக்களுக்கு படையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம்
லொட்ஜில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஜீப்வண்டியில் வந்தோரால் கடத்தல்
யானை தாக்கியதால் 8 வயதுச் சிறுமி உயிரிழப்பு
துப்பாக்கிகளுடன் இளைஞர் கைது
4 ஆசிரியர்கள் திடீரென இடமாற்றப்பட்டதால் மாணவரின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பல பகுதிகள் வெள்ளத்தில்; போக்குவரத்து துண்டிப்பு
மட்டு. தேர்தல் குறித்து இன்று முக்கிய அறிக்கை
குடாநாட்டில் கோடை மழை பயிர்ச்செய்கை பெரிதும் பாதிப்பு
இரு நாள் விஜயமாக அஞ்சல் மா அதிபர் யாழ். குடாவுக்கு இன்று விஜயம்
மட்டு. மாநகர மேயராக பத்மினி தெரிவானார்
காஸா பகுதிக்கு இலங்கையிலிருந்து பொருட்களை சேகரித்து அனுப்ப ஏற்பாடு
றோயல் - தோமியன் கல்லூரிகளுக்கிடையே 129 ஆவது கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்
கலேவெல, தம்புள்ளையில் கடும் மழை நெல் அறுவடைகள் பெரும் பாதிப்பு
மைதானத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் விளையாட்டு வீரர்கள் அசௌகரியம்
17 ஆவது திருத்த சட்டமூலத்தை அமுல்படுத்த ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தடுக்கிறது
ஏதாவதொரு தொழிற்பயிற்சியை பெண்களும் பெற்றிருப்பது இன்றைய சூழலில் மிக அவசியம்
5 வருடங்களுக்கு முன் காணாமல்போன குடும்பஸ்தர் எலும்புக்கூடாக மீட்பு
கொழும்பு மட்டக்குளியில் ஆசிரியர் கடத்தல் மக்கள் கண்காணிப்பு குழுவிடம் முறையீடு
15ஆவது சார்க் மாநாடு கண்டியிலிருந்து கொழும்பிற்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு
மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாட்டுக்கு இந்தியா உட்பட ஆசிய நாடுகள் பகிரங்க ஆதரவு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com