ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனைத்துப் பிரிவுகளிலும் சேவை செய்யும் உத்தியோகத்தர்கள் எந்தவொரு கட்சிக்கோ அரசாங்கத்துக்கோ சார்பாகவோ எதிராகவோ செயற்படுவது சட்டப்படி கடுமையான சர்வதேசக் குற்றமாகும். ஆனால், சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெவ் அமைப்பு அதற்கெதிரான வகையில் செயற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ஜூன் மாதம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதைக் கண்டித்தும் அரசைக் குற்றம் சாட்டியும் ஆர்ப்பாட்டம் கொழும்பு புகையிரத நிலையத்தின் முன்பாக நடத்தப்பட்டது. மேலும் மேற்படி கொலைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று கோரியும் நடத்தப்பட்ட இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கறுப்புத்துணியால் வாய் கட்டியவாறு பலர் கலந்து கொண்டனர். இதன்போது, இவ்வாறு வாய் கட்டியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட லாரா ஸ்கொற் (Lara Scott) எனப்படும் பெண் பணியாளருக்கு யுனிசெவ் தலைமையகத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.