-பரதன் குப்புசாமி-
மலேசியாவினது ஆளும்தேசிய முன்னணி கூட்டணி,கடந்த ஐந்து தசாப்தங்களாக அனுபவித்த,தோல்வியைத் தழுவாத அதிகாரத்தை இழந்துள்ளதுடன் தேசிய பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும்,5 மாநில அரசுகளையும் இழந்துள்ளது.
சனியன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிகளவு நன்மையைப் பெற்றவர் சீர்திருத்த தலைவரும்,3 கட்சிகளை உள்ளடக்கிய மதச்சார்பற்ற எதிர்க்கட்சியை வழிநடத்தியவருமான அன்வர் இப்றாகிம் ஆவார். இவரது வேண்டுகோளை திறமையற்ற தலைமைத்துவம்,ஊழலை ஒழிக்கத் தவறியமை, அதிகாரித்துவரும் இன, மத முரண்பாடுகள் ஆகியவற்றால் சலிப்படைந்த வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
222 ஆசனங்களைக் கொண்ட சமஷ்டி பாராளுமன்றத்தில் ஆளும் கூட்டணி 139 ஆசனங்களை பெற்றுள்ளது. இது சாதாரண பெரும்பான்மை மாத்திரமே. எனினும் இந்த அரசாங்கத்திற்குத் தனது புதிய தாராளமயக் கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கக் கூடியதாக உள்ளது.
எப்படியிருப்பினும் எதிர்க்கட்சிகளின், பிரதான இலக்கான,ஆளுங்கட்சி (பரிசான் நெஷனல் ) க்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்காத நிலையில் வெற்றிகொண்டுள்ளன.மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமிடத்து சட்ட அமைப்பிற்கு அரசு மக்கள் விரும்பாத திருத்தங்களைக் கொண்டுவந்திருக்கும், எதிர்க்கட்சிகளுள் மக்கள் நீதிக்கட்சி,இஸ்லாமியக்கட்சி,ஜனநாயக அக்ஷன்கட்சி ஆகியன அடங்கும்.
பிரதம மந்திரி அப்துல்லா பதாவி ஒரு சமஷ்டி அரசினை சாதாரண பெரும்பான்மையுடன் நிறுவ முடிமாயினும் தோல்வி அவருக்குத் தனிப்பட்ட முறையில் அவமானம் தருவதாகவேயுள்ளது. அவரை ஏற்கனவே பதவியைத்துறந்து அதிகாரத்தை அவரது உதவி நஜிப் றசாக்கிடம் கையளிக்குமாறு நெருக்குதல் கொடுக்கப்பட்டது.
அரசியலில் முதிர்ச்சி காரணமாக,இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் 1969 முஸ்லிம் மலே ஆளும்கூட்டணி அரசு தோற்கடிக்கப்பட்டபோது நடந்தவைபோல் இடம்பெறவில்லை.
சனிக்கிழமை வெளியான பெறுபேறுகள் பதாவியினுடைய அதிர்ஷ்டத்தில் ஒரு பாரதூரமான பின்னடைவு எனக் கூறலாம். அவர் தனது முன்னணியை 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 91 வீதமான ஆசனங்களையும் 12 மலேஷிய சமஸ்தானங்களையும் பெறும்படி வழிநடத்தினார்.
அரசாங்கம் தோல்வியடைந்த சமஸ்தானங்களுள் மேற்கில் தொழில்வளம் உள்ளவையா செலாங்கூர், பினாங் ஆகியவையும் வடக்கில் பெறாக்கும் அடங்கும். வடக்கில் கெடாவும், கிளாந்தனும் அடிப்படைவாதிகளான பி.ஏ.எஸ். கட்சியின் வசமாயின.
இத்தேர்தலில் பிரதான பிரச்சினையாக இருந்தது. சீன, இந்திய மக்களிடையே காணப்பட்ட விரக்திநிலையாகும். புதிய பொருளாதார கொள்கை (NEP) யின் படி சிறுபான்மை மக்களிற்கு பாகுபாடு காட்டப்படுகின்றது என்ற கண்டனக்குரல் வலுப்பெற்றிருந்தது. அதாவது மலே மக்களுக்கும், முஸ்லிம் மதக்கொள்கையுடையோர்க்கும் வேலை வழங்குதல், வர்த்தகம் கல்வி ஆகியவற்றில் கூடிய வாய்ப்பு அளிக்கப்படுவதாகக் குறைகூறப்பட்டது.
புதிய பொருளாதாரக் கொள்கைக்குள் அடக்கப்படாத வறிய மலே ஜாதியினர் கூட அதிக தொகையில் எதிர்க்கட்சிக்குத் தமது வாக்குகளை அளித்தனர். அவர்கள் தேர்தற் பிரசாரக் காலத்தில் அன்வரது பணக்கார, செல்வாக்குள்ள மலே மக்களினால் என்.ஈ.பி.திசைதிருப்பப்படுகிறது என்ற வாதங்களினாற் கவரப்பட்டனர்.
இத்திட்டம் 37 வருடங்களுக்கு முன்னர் பணக்கார, சீன மக்களது நிலையை பெரும்பாலான மலே மக்களும் எட்டக் கூடியதாக வகுக்கப்பட்டது. ஆனால், மலேமக்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ள நிலையிலும் இந்த பாரபட்சம் காட்டும் நிலை தொடர்ந்ததாக சிறுபான்மையினர் குறைகூறிவந்தனர்.
மலேசியாவின் 27 மில்லியன் மக்களில் மலேமக்கள் 60 வீதமாவர். சீன மக்கள் 25 வீதமும், இந்தியர்கள் 8 வீதமும் ஆவர். என் எவ்வில் ஒவ்வொரு இனமும் அங்கத்துவம் வகிக்கிறது. இது இன முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக முன்னர் மேற்கொள்ளப்பட்ட முறையாகும்.
றகுகேசவர், மலேஷியன் சட்டவல்லுநர் குழுவின் உபதலைவர் கூறுவதாவது; "அரசில் எல்லா இனங்களும் வெறுப்புக் கொண்ட காரணத்தினால் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கத் தீர்மானித்தனர்."
"மக்கள் அரசியல் முதிர்ச்சி பெறுவதும், உறுதியான ஜனநாயகம் மிளிர்வதும் ஒரு நல்ல அறிகுறியாகும்."
அவர் ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியதாவது: "பல இனக்குழு மக்களைக் கொண்ட அரசியலுக்கு எதிர்க்கட்சிகளின் வெற்றியும், இரண்டு கட்சி அரசியல் உருவாதலும் நன்மை பயப்பனவாகும். இந்த நாட்டில் நீண்டகாலமாக அரசியல் ஒரு கட்சி ஏகபோக உரிமை பெற்றிருந்தது."
எதிர்க்கட்சித் தலைவர் வெற்றியைக் கொண்டாடும் கூட்டமொன்றில் கூறியதாவது; "இது எமது வரலாற்றில் முன்னொருபோதும் காணாத பெரு வெற்றியாகும். மக்கள் ஒரு உறுதியான முறையில் ஒரு புதிய சகாப்தத்திற்காக வாக்களித்துள்ளார்கள். அரசாங்கம் யாவரையும் உள்ளடக்கியதாகவும், எல்லா மலேசியா மக்களையும், இனம், நிறம், கலாசாரம், மதம் என்ற பாகுபாடு காட்டாமல் ஒரு தேசமக்களாகக் கருத வேண்டும்."
பொதுமக்களது புரட்சிக்குக் காரணமாக அமைந்த ஏனைய காரணங்களாக அமைந்தமை படாவி ஊழலுக்கெதிராக நடவடிக்கை எடாதமை, மிகவேகமாக அதிகரித்து வந்த பணவீக்கத்தை அலட்சியப்படுத்தியமையுமாகும்.
நாடு பூராவும் சீனமக்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகள் சீனமக்களைக் கொண்ட டி.ஏ.பி.வசமாயின, இவர்கள் படாவியினது கொள்கைகளிலும், செயற்பாடுகளிலும் ஆத்திரமுற்றிருந்தனர்.
ஒரு சுதந்திர மலேஷிய சஞ்சிகையான மலேஷியாக்கினியின் பத்திராதிபர், ஸ்ரீவன்கான் கூறுவதாவது; " இது ஒரு அரசியல் சுனாமி. இது முன்னெப்போதும் இல்லாதது. இது மலேஷிய அரசியலில் ஒரு புதிய சகாப்தமாகும்."
அவர் ஐ.பி.எஸ்ஸிற்குக் கூறியதாவது; "இந்த எதிர்க்கட்சி பெற்ற வெற்றியானது இருகட்சி அரசியல் ஆட்சிமுறையை உருவாக்கியுள்ளது. இந்த வெற்றி மலேஷியாவில் ஜனநாயகம் வேரூன்ற வழிவகுத்துள்ளது."
முன்னைநாள் எம்.சீ.ஏ.தலைவரும், ஆய்வாளருமான ஸ்ரான்லிகோ கூறுவதாவது; "இந்த நாட்டில் அரசியல் நடத்தப்படும் நிலையில் ஒரு ஆணித்தரமான மாற்றத்தை எதிர்க்கட்சிகளின் வெற்றி கொண்டு வந்துள்ளது. இதன் பெறுபேறு நாட்டின் அரசியலை மாற்றியெழுதும்."
"எதிர்க்கட்சியைச் சேர்ந்த நியாய துரந்தரர்கள் தங்களது பிரசார நேரங்களில் பதாவி தீவிரவாத முஸ்லிம் அதிகாரிகள் இந்து, சீன ஆலயங்களை அழிப்பதை நிறுத்தத் தவறிவிட்டார் எனக் குறை கூறியுள்ளனர்."
சட்டவல்லுநரும், மனிதநேய ஆர்வலருமான ராமு கந்தசாமி கூறியதாவது; "அவர் எங்களது மத சுதந்திரம், வணக்கத் தலங்களை பாதுகாத்தல் ஆகியவை சட்ட பூர்வமானவை என வலியுறுத்தத் தவறிவிட்டார்."
அவர் மேலும் கூறியதாவது; "மக்கள் தமது வெறுப்பை வாக்களிக்கும் தருணத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். அப்துல்லா இந்தப் புண்களை ஆற்றவேண்டும். எமது புண்கள் ஆழமானவை. அவை ஆறப் பல நாட்கள் எடுக்கும்."
ஆளும் கட்சியின் தலைவர்கள் 13 நாள் தேர்தல் பிரசார காலத்தில் தலைவர் அன்வர் இப்றகாம் பாரிய சனத்தொகையைக் கவர்ந்திருப்பதைக் கண்டு விசனமடைந்தனர்.
அவரது "நாங்கள் எல்லோரும் சமம்" என்ற செய்தி சிறுபான்மையினரை மந்திர சக்திபோலக் கவர்ந்தது. சிறுபான்மையினர் கல்வி, தொழில், நிதியுதவி, மதக் கொள்கைகள் ஆகியவற்றில் பாரபட்சம் காட்டப்பட்டு வருந்தியவர்கள்.
பல தசாப்த காலப்பகுதியின் பின்னர் பல சமூகவாதிகள் பாராளுமன்றத்தின் உட்பகுதியைப் பார்க்க உள்ளனர். அவர்கள் பாராளுமன்றத்தால் உயிரோட்டமுள்ள விவாதங்களிற் பங்குபற்றி மக்களது பல்வேறு குறைபாடுகளையும் வெளிக்கொணரவுள்ளனர்.
இடதுசாரி வெற்றியாளர்களில் டாக்டர் நாசீர் காஷிம், டாக்டர் மைக்கல் ஜெயக்குமாரும் அடங்குவர். மலேஷியாவிலுள்ள இந்தியர்களால் வெறுக்கப்படும் மலேஷியன் இந்திய காங்கிரசின் தலைவர் சாமிவேலுவைத் தோற்கடித்தவர் மைக்கல் ஜெயக்குமார் ஆவர்.
மேலும் தலைநகரில் உள்ள தொகுதிகளில் பெரும்பாலான இடங்களை எதிர்க்கட்சி பெற்றுள்ளது. வெற்றியீட்டியவர்களுள், இப்றாகிமினின் மகள், 27 வயதான நுஸ்றால் இசா, முன்னைநாள் பெண் அமைச்சரொருவரைத் தோற்கடித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர், இப்றாகிம் கூறுவதாவது; "வரலாற்றில் காணாத ஒரு முக்கியமான நேரம் இதுவாகும். மக்கள் ஆணித்தரமாக புதிய சகாப்தமொன்றுக்கு வாக்களித்துள்ளனர். இதில் அரசு மத, இன, நிற வேறுபாடின்றி "மலேஷியர்கள்" என அங்கீகரிக்க வேண்டும்."
ஐ.பி.எஸ்