டுபாயில் போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட மிகப்பெரும் விபத்தில் 200 கார்கள் ஒன்றுடனொன்று மோதிக் கொண்டதில் ஆறு பேர் பலியானதுடன், 287 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அபுதாபி மற்றும் டுபாய் இடையேயான நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு வாகனப் போக்குவரத்து அதிகளவில் இருந்தது.
மூடுபனி படர்ந்து இருந்ததால் வாகன சாரதிகள் மிகவும் சிரமப்பட்டனர். அபுதாபி- டுபாய் எல்லைப் பகுதியில் ஒரு கார் மற்றொரு கார் மீது மோதியது. தொடர்ந்து 200 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து நேரிட்டது. இதில் 25 கார்கள் தீப்பிடித்து எரிந்தன.
இந்தக் கோர விபத்தில் ஆறு பேர் இறந்தனர். இதில் இரண்டு பேர் இந்தியர்கள் எனக் கூறப்பட்டாலும், அபுதாபியில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் அதை உறுதிப்படுத்தவில்லை. விபத்தில் 30 இந்தியர்கள் உட்பட 287 பேர் காயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் அபுதாபியில் உள்ள அல்-ரபா மற்றும் அல்மபராக் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
மூடுபனி தொடர்ந்து காணப்பட்டதால் விபத்து நடந்த பகுதியில் 11.30 மணி வரை மீட்புப் பணியை மேற்கொள்ள சிரமமாக இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.