Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
நேபாள பிரதமர் கொய்ராலா அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு
[14 - March - 2008] [Font Size - A - A - A]
நேபாளப் பிரதமர் கிரிஜாபிரசாத் கொய்ராலா எதிர்வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக முடிவு செய்துள்ளார்.

இந்தியாவில் பிறந்தவரான இவர், நேபாளத்தில் ஐந்தாவது முறையாக பிரதமர் பதவி வகிக்கிறார்.

தனது ஓய்வு குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நேபாளத்தில் எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நான் அரசிலிருந்து ஓய்வு பெறவுள்ளேன்.

புதிய தலைமுறையிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விடைபெறுவதற்குத் திட்டமிட்டுள்ளேன். அத்துடன், நடைபெறவுள்ள தேர்தலை எந்தவொரு சக்தியாலும் சீர்குலைக்க முடியாது.

மேலும் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய இந்த முக்கியமான தேர்தலை சீர் குலைப்பதற்கு மன்னர் ஞானேந்திராவின் ஆதரவாளர்கள் முயன்று வருகிறார்கள்.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக தெராய் நகரிலுள்ள இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ஊடுருவல் மற்றும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து இந்திய அரசுடன் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மாதேவி மக்கள் அதிகமாக வாழும் பிராந்தியத்துக்கும் சுயாட்சி வழங்குவது தொடர்பாக மாதேவி இன மக்களின் பெரிய இயக்கத்துடன் அண்மையில் நேபாள அரசு ஒரு உடன்பாட்டை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆயுதம் ஏந்திப் போராடும் இந்த இன இயக்கத்தினருடன் உடனடிப் பேச்சுக்கள் எதுவும் கிடையாதென தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
நேபாள பிரதமர் கொய்ராலா அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு
டுபாயில் இருநூறு கார்கள் ஒன்றுடனொன்று மோதியதில் ஆறு பேர் பலி; 287 பேர் காயம்
இணையத்தள தணிக்கைக்கு எதிராக பிரான்ஸின் எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கொலைக் குற்றச்சாட்டின் பேரில் டாக்டர் ஜெயந்த் அமெரிக்காவில் கைது
சர்தாரியைப் பிரதமராக்க முடிவு அவர் மீதான ஊழல் வழக்கு தள்ளுபடி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com