மன்னார் பள்ளிமுனைக் கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டிருந்த ஆறுபேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை இக் கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டிருந்த இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இதேநேரம், புதன்கிழமை காலை பள்ளிமுனைக் கடற்பரப்புக்கு மீன்பிடிக்கச் சென்ற ஐவரில் நால்வர் அங்கு படகொன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சென்ற ஐந்தாமவர் படகுடன் கரை திரும்பியுள்ளார். இது தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்திலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து நேற்று பள்ளிமுனை மீனவர்களில் பெரும்பாலானோர் தொழிலுக்குச் செல்லவில்லை.