வன்னிக் களமுனையில் தொடர்ந்து கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, மணலாறு, மன்னார் பகுதிகளில் நேற்று முன்தினம் புதன் கிழமை காலை முதல் இந்த மோதல்கள் நடைபெற்றுள்ளன.
வவுனியாவில் கரம்பைக்குளம், கரம்பாச்சிக்குளம், சவேரியன் குளம் பகுதிகளில் இந்த மோதல்கள் நடைபெற்றுள்ளன.
மணலாறு பகுதியில் கொக்குத்தொடுவாய் பகுதியில் மூன்று தடவைகளும் ஆண்டான்குளம் பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. மன்னாரிலும் மூன்று முறிச்சான், மல்லிகைத்திடல் மற்றும் கரம்பைக்குளம் பகுதிகளில் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த மோதல்களில் 28 புலிகள் கொல்லப்பட்டும் 49 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருவதாக படையினர் தெரிவித்துள்ளனர்.தங்கள் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.