பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டுமென்று பயிற்ச்சியாளர் லோசன் ஆலோசனை கூறியுள்ளார்.
32 வயதாகும் சொயிப் அக்தர் சர்ச்சைக்குரியவராக இருந்து வருகிறார். மேலும் அவர் உடல் நல தகுதிப் பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு மிகச் சில போட்டிகளில் மட்டுமே அவர் பங்கேற்றார். இந் நிலையில், அக்தர் டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டுமென்று ஆலோசனை கூறியிருப்பதாகப் பாகிஸ்தான் பயிற்சியாளர் லோசன் கூறியுள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் மட்டும் ஆடுவதன் மூலம் மேலும் அதிக காலம் போட்டிகளில் பங்கேற்கலாம் என்றும் லோசன் தெரிவித்துள்ளார்.