அமெரிக்காவின் ஹோட்டல் ஒன்றிலுள்ள அறை ஒன்றிலிருந்து ஓராண்டுக்கு முன்பு இறந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்திலுள்ள நியூபோர்ட் கடற்கரை ஹோட்டலில் நியூஸிலாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் டேவிட்டும் அவரது காதலியான மோனிக் ட்ரெப்பும் கடந்த ஆண்டு தங்கியுள்ளனர்.
அச்சமயம் போதைப்பொருள் வைத்திருந்தமைக்காக டேவிட் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்,அக்ஹோட்டலில் சோதனை நடத்திய போதைத் தடுப்பு பொலிஸார் ஒரு அறையில் மோனிக்கின் உடல் குளிர்க்கட்டிகள் நிரப்பப்பட்ட பையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் மோனிக் இறந்து பல மாதங்கள் ஆனதைக் கண்டுபிடித்திருந்தாலும் அவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதைக் கண்டுபிடிக்கவில்லை. ஆதலால், இவர் எந்த முறையில் இறந்தார் என்பது குறித்த விசாரணைகளை ஸ்டீபன் டேவிட்டிடம் மேற்கொண்டு வருகின்றனர்.