Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
குண்டு வெடிப்பு பீதியை பயன்படுத்தி உடமைகளை சூறையாடும் கும்பல்
[15 - March - 2008] [Font Size - A - A - A]
நாட்டில் குண்டுவெடிப்புகளால் மக்கள் அச்சமும் பீதியும் அடைந்திருக்கையில் அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி பஸ்களில் பயணிகளின் உடமைகளைப் பறிப்போரால் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பெரும் குண்டுப்புரளியேற்பட்டது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது;

வெள்ளவத்தை பகுதியில் நேற்று நண்பகல் பஸ் ஒன்றில் பயணம் செய்த தமிழ் பெண் ஒருவரின் கைப்பையை அறுத்த `பிற்பொக்கற்'

காரனொருவன், பஸ்ஸிற்குள் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியவாறு பஸ்ஸிலிருந்து குதித்து அந்தக் கைப்பையுடன் வேறொரு பஸ்ஸில் ஏறிச் சென்றுவிட்டான்.

இதையடுத்து அந்த பஸ் அவசர அவசரமாக நிறுத்தப்படவே அதிலிருந்த பயணிகள் விழுந்தடித்துக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கியுள்ளனர்.

இந்த நேரத்தில், கைப்பையை பறிகொடுத்த பெண்ணும் கீழே இறங்கி, தனது கைப்பையை பறித்துக் கொண்டு ஒருவன் ஓடுவதாகவும் அவனே, பஸ்ஸினுள் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டுத் தப்பி விட்டதாகவும் எனத்தெரிவிக்கவே அந்த பஸ் பயணிகள் நிம்மதியுடன் மீண்டும் பஸ்ஸில் ஏறி பயணத்தை தொடர்ந்தனர்.

எனினும், கைப்பையை பறிகொடுத்த பெண் கவலையுடன் வீதியோரத்தால் நடந்து சென்று கொண்டிருந்த போது வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் முன்பாக குண்டு புரளியேற்பட்டு மக்கள் நாலாபுறமும் ஓடிக் கொண்டிருந்தனர்.

வீதிக்கு வந்த பொலிஸாரும் அங்கு பெரிய கைப்பையொன்று கிடப்பதை அவதானித்து, அப்பகுதியிலுள்ள கடைகளை பூட்டுமாறு கூறியதுடன் அப்பகுதிக்கு எவரையும் வரவேண்டாமென எச்சரித்தனர்.

முதலில் அவ்விடத்திற்குச் சென்ற, சற்று துணிச்சல் மிக்க பொலிஸ் கான்ஸ்டபிள் கைப்பையை தூக்கி பார்த்த போது அது சற்று பாரமாக இருக்கவே அச்சத்தால் அதனைக் கீழே வைத்துவிட்டார்.

பின்னர் குண்டு செயலிழக்கும் படையினர் அங்கு வந்து சோதனையிட்ட போது அது கைப்பையொன்றும் அதற்குள் குண்டுகள் எதுவுமிருக்கவில்லையென்பதும் தெரியவரவே பொலிஸார் கைப்பையை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இவ்வேளையில், கைப்பையை பறிகொடுத்த பெண் அவ்விடத்திற்கு வந்து விசாரித்த போது, அது அவரது கைப்பையென்பது தெரியவந்தது. அந்தப் பையை அபகரித்த பிற்பொக்கற்காரன் அதற்குள்ளிருந்தவற்றை எடுத்துக் கொண்டு அதனை வீதியில் வீசியெறிந்துவிட்டுச் சென்றுவிட்டான்.

திருடன் ஒருவனின் செயலால் இரு இடங்களில் குண்டுப் புரளியேற்பட்டு மக்கள் பெரும் அச்சமும் பீதியுமடையும் நிலையேற்பட்டது.

Email this page Your Opinion Print this page
குண்டு வெடிப்பு பீதியை பயன்படுத்தி உடமைகளை சூறையாடும் கும்பல்
பாராளுமன்றத் தெரிவு குழுவை நியமித்து மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் அறிவிப்பு ஏமாற்றுவித்தை
ரூபவாஹினி ஊழியர்கள் மீது தொடர்ந்து வன்முறை காடையரால் தாக்கப்பட்ட உதவி இயக்குநர் படுகாயம்
கிழக்கு மாகாண தேர்தலுக்கு வியூகம் வகுப்பதில் மும்முரம்
மலையகப் பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை மண்சரிவு, வெள்ள அபாயம், இயல்பு நிலை பாதிப்பு
கிளிநொச்சிக்கு கிழக்கே விமானத் தாக்குதல்
பொரளையில் தலை, முல்லேரியாவில் உடல் இளைஞன் படுகொலை; பொலிஸார் விசாரணை
கொட்டாஞ்சேனையில் தமிழர் கடத்தப்பட்டார்
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் சந்திரிக்கா
இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தலில் முதல் முறையாக 2 சிங்களவர்கள் தெரிவு
மேல் மாகாண சபை ஆளுநரின் உத்தரவையடுத்து கொழும்பு மாநகர சபை ஆணையாளர் கட்டாய லீவில்
வவுனியா வன்னிப்பிரதேசங்களில் அடை மழை நெல் அறுவடை வேலைகள் பெரிதும் பாதிப்பு
ஐரோப்பிய, இலங்கை ஆணைக்குழுக்களின் ஏழாவது ஒன்றுகூடல் ஜூன் மாதத்தில்
பேரினவாத நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உரமூட்டவே அரசு கிழக்கில் தேர்தல்களை நடாத்துகின்றது
ஜயந்திபுர கொலை வழக்கில் இரு சகோதரர்களுக்கு மரண தண்டனை
பதுளையில் கடும் மழை; மண்சரிவு 80 குடியிருப்புக்களைச் சேர்ந்த 400 பேர் நிர்க்கதி
சப்ரகமுவ மாகாண ஊடகவியலாளர்களுக்கு இலவச பஸ் பயண அனுமதிப்பத்திரம் வழங்கல்
மாத்தளை நகர தங்க நகை விற்பனை நிலையத்தில் 14 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை
வெள்ளவாயாவில் பஸ் பயணி ஒருவரிடமிருந்து பிஸ்ரலுக்கான ரவைகள் மீட்பு
இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு கண்டனம்
ஐரோப்பிய ஒன்றிய விஷேட பிரதிநிதிகளுடன் மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ எம்.பி. சந்திப்பு
இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு கண்டனம்
உதவி இயக்குநர் மீதான தாக்குதலுக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்
அரசு பெறும் பாரிய கடனுக்கு கணக்கு இல்லை யுத்தத்தை காரணம் காட்டி தப்பிவிட முயற்சி
கொழும்பு கம்பன் கழக இசைவேள்வியில் டாக்டர் மகேஸ்வரன் புலமைப்பரிசில் பெறுவோர் விபரம்
`அனைத்து பெண்களின் உரிமைகளையும் தொடரும் யுத்தம் அழித்துக் கொண்டிருக்கிறது'
இந்திய வம்சாவளி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்
மலேசியத் தேர்தலில் சிறுபான்மையினரின் குரல் பலமாக ஒலித்திருப்பதாக மகிழ்ச்சி
தமிழகத்தில் புலிகளின் நடமாட்டமும் நடவடிக்கைளும் நிச்சயமாக இல்லை
ஐ.ஓ.சி. க்கு வழங்கப்பட்ட 107 எரிபொருள் விற்பனை நிலையங்களை மீளப்பெறுவது நியாயமா?
கிளிநொச்சி, மாங்குளம், முல்லைத்தீவு இலங்கை வங்கி கிளைகளுக்கு ஆளணி உதவியாளர் நியமனம்
`ஐ.தே.க. அரசுக்கெதிராக விமர்சனங்களை வெளியிட்டாலும் ஜனாதிபதி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாது'
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி.யும் போட்டியிடும்
முறைகேடான விதத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களின் இடமாற்றம் இரத்து
வெளிநாட்டுக் கப்பல்களை அனுமதித்ததாலேயே இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com