Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
நியூஸிலாந்துடனான 2 ஆவது டெஸ்ட் இங்கிலாந்து அணி வலுவான நிலையில்
[15 - March - 2008] [Font Size - A - A - A]
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இனிங்ஸில் 144 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது.

மைக்கல்வோகன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளிடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்டில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகளிடையேயான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் வியாழக் கிழமை தொடங்கியது.

நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக குக்,வோகன் ஆகியோர் களமிறங்கினார்கள். இருவரும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் ஆடினார்கள். மதிய உணவு இடைவேளையின் போது,இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 79 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

மதிய உணவு இடைவேளை முடிந்த அடுத்த ஓவரிலேயே வோகன் (32 ஓட்டங்கள் ) ஆட்டமிழந்தார்.அடுத்து குக் 44 ஓட்டங்களிலும் ஸ்டிராஸ் 8 ஓட்டங்களிலும் இயன்பெல் 11 ஓட்டங்களிலும் பீற்றர்சன் 31 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டம் எடுத்திருந்தது.

6-ஆவது விக்கெட்டுக்கு கொலிங்வூட்,அம்புரோஸ் ஆகியோர் நிலைத்து நின்று ஆடினார்கள்.விக்கெட் கீப்பர் அம்புரோஸ் அடித்து ஆடினார். முதல்நாள் ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டம் எடுத்தது.

கொலிங்வூட் 113 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 48 ஓட்டங்களும் அம்புரோஸ் 137 பந்துகளில் 15 பவுண்டரி 2 சிக்சருடன் 97 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காதிருந்தனர்.

2 ஆம் நாள் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி மேலும் 51 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மிகுதி 5 விக்கெட்டுக்களையும் மளமளவென இழந்து 342 ஓட்டங்களையே பெற்றது. பந்து வீச்சில் கிலெஸ்பி -4, ஓரம்-3, மில்ஸ் -2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு முதல் இனிங்ஸில் ஆடிய நியூஸிலாந்து அணி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் வேகப்பந்திற்கு முகம் கொடுக்க முடியாது 198 ஓட்டங்களுக்கு ஆட்டழிமந்தது.

இதில் ரெயிலர் -53, வெற்ரோறி ஆட்டமிழக்காது- 50, பிளமிங் - 34, மக்குலம் -25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் ஜேம்ஸ் அன்டர் சன் - 5 ,கொலிங்வூட் - 3 விக்கெ ட்டுக்களைக் கைப்பற்றினர்.

பின்னர் 2 ஆவது இனிங்ஸுக்காக களமிறங்கிய இங்கிலாந்து அணி 2 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்களைப் ெபற்றது.

Email this page Your Opinion Print this page
சாம்பியன் கிண்ணப் போட்டி அட்டவணையில் வலுவிழந்த பிரிவில் இலங்கை அணிக்கு இடம்
கிரிக்கெட் துளிகள்
நியூஸிலாந்துடனான 2 ஆவது டெஸ்ட் இங்கிலாந்து அணி வலுவான நிலையில்
சர்வதேச போட்டிகளில் சதமடித்த துடுப்பு மட்டைகளை சேகரிக்கும் சச்சின்
`வெற்றிக்காக ஆட்டை பலி கொடுத்ததால் அணியிலிருந்து கப்டன் தோனியை நீக்க வேண்டும்'
இன ரீதியில் தென் ஆபிரிக்க அணி தெரிவு நெல் நீக்கப்பட்டதால் பெரும் குழப்பம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com