Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
ஆடைத் தொழிற்சாலையில் உணவு விஷமடைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் ஆஸ்பத்திரியில்
[16 - March - 2008] [Font Size - A - A - A]
வத்துப்பிட்டிவெல பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் உணவு விஷமடைந்ததால் கடந்த இரு நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி ஆடைத் தொழிற்சாலையில் உணவு விஷமானதால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 25 பெண் ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதே தொழிற்சாலையைச் சேர்ந்த மேலும் 80 பெண் ஊழியர்கள் நேற்றுக் காலை வத்துப்பிட்டிவெல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

உணவு விஷமடைந்ததாலேயே இவர்களும் நேற்றுக் காலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட மேற்படி பெண் உழியர்கள் எவருக்கும் உயிராபத்து எதுவுமில்லையெனவும் எனினும், ஓரிரு தினங்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டுமெனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com