Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஹீத்துரு விமான நிலையத்தினுள் நுழைந்த தமிழ் இளைஞன் கைது
[16 - March - 2008] [Font Size - A - A - A]
லண்டன் ஹீத்துரு விமான நிலையத்தினுள் நேற்று சனிக்கிழமை மாலை அத்துமீறி நுழைந்த இலங்கைத் தமிழ் இளைஞனொருவர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தினுள் விமானமொன்றுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் வந்ததாகக் கூறியே இலங்கைத் தமிழரெனக் கருதப்படும் கேதீஸ்வரன் உதயகுமார் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டதாக லண்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹீத்துரு விமான நிலையத்தின் பாதுகாப்பு வேலியை இவர் கடந்து வந்த போதே கைது செய்யப்பட்டதாக, விமான நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கமாண்டோ படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இவர் தீவிர விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் கைது செய்யப்பட்டதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட அதேநேரம், இவர் அங்கு திடீரென நுழைந்ததால் விமான சேவைகளிலும் சிறிது நேரம் பாதிப்புகள் ஏற்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஹீத்துரு விமான நிலையம், ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வந்த நிலையில், அங்கு இந்த இளைஞர் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை லண்டன் பொலிஸார் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Email this page Your Opinion Print this page
உதவி வழங்கமுன் நிலைமையை ஆராய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வருகை
அடுத்த சில தினங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுக்கும் என்கிறார் ஹக்கீம்
யாழ். கடல்நீரேரியில் படகில் சென்றோர் மீது துவக்கு சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்
மன்னார், மணலாறு பகுதிகளில் படையினர், புலிகள் கடும் மோதல்
ஹீத்துரு விமான நிலையத்தினுள் நுழைந்த தமிழ் இளைஞன் கைது
பல்கலைக்கழக அனுமதிக்கு 40 ஆயிரம் விண்ணப்பங்கள்
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
கிழக்கு மாகாண முன்னாள் இராணுவத் தளபதியை பழிவாங்கும் படலம் தொடர்வதாக குற்றச்சாட்டு
இரத்தினபுரியில் மாலை நேரங்களில் கடும் மழை, மண்சரிவு அபாயம்
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உலகிற்கு இலங்கை முன்னுதாரணம்
ரஷ்யாவிலிருந்து விமானப்படைக்கு 5 `மிக்- 29' விமானங்கள் கொள்வனவு
கொழும்பு மாநகரசபை தொடர்பாக முதலமைச்சர், ஆளுநர் ஜனாதிபதியை சந்திப்பர்
மின்னல் தாக்கி இளம்தாய் மரணம்
மன்னாரில் பொறிவெடியில் சிக்கி படையணி கட்டளை அதிகாரி மரணம்
அரச கரும மொழிகளை அனைத்து நிறுவனங்களிலும் அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தல்
இரு இளைஞர்களின் சடலங்கள் ஒப்படைப்பு
தென்மராட்சியில் கைவிடப்பட்ட கால்நடைகள் படையினரால் உரியவர்களிடம் கையளிப்பு
சவுதியில் மரண தண்டனை வழங்கப்பட்ட றிஷானா விடுதலை செய்யப்படும் சாத்தியம்
வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றமாக தரம் உயர்வு
போலி முகவர்கள் குறித்து சிங்கப்பூர் தூதரகம் எச்சரிக்கை
இசை வேள்வி இரண்டாம் நாள் நிகழ்வு இன்று தமிழக இசைக் கலைஞர் அருண் பாடுகிறார்
நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி மரணம்
வடக்கில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்தும் பெருமளவில் உதவி வருகின்றது
அதிரடிப்படை வீரர் பலி மூவர் படுகாயம்
தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்க ரூபவாஹினி ஊழியர்கள் முஸ்தீபு
கிழக்கு மாகாண சபைக்கு 37 உறுப்பினர்கள் தெரிவாவர்
திருமலை 5 மாணவர் படுகொலை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை `கொழும்பில் வீடு தருகிறோம்; விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாம்'
மின் கட்டண உயர்வை கண்டித்து மாத்தளையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்திக்கு `மாமனிதர் விருது' வழங்கி புலிகளின் தலைவர் கௌரவிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com