Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மன்னார், மணலாறு பகுதிகளில் படையினர், புலிகள் கடும் மோதல்
[16 - March - 2008] [Font Size - A - A - A]
* இருதரப்புக்கும் அதிக இழப்புகள்

மன்னார் மற்றும் மணலாறு பகுதிகளில் நேற்று முன்தினம் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நடைபெற்ற கடும் மோதல்களில் பலத்த உயிர்ச் சேதமேற்பட்டுள்ளதாக பரஸ்பரம் இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் பத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதேநேரம், இவ்விரு பகுதிகளிலும் படையினரின் முன்னகர்வு முயற்சிகள் முறியடிக்கப்பட்டதில் 22 படையினர் கொல்லப்பட்டும் பெருமளவானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

மணலாறில் நிக்கவெவ, ஜனகபுர மற்றும் கிரிப்பன்வெவ பகுதிகளில் வெள்ளிக்கிழமை கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இதன் போது விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் பலவும் முன்னரங்க காவல் நிலைகள் பலவும் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த மோதல்களில் படையினர் தரப்பில் மூன்று படையினர் கொல்லப்பட்டும் எட்டுப் படையினர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் போது புலிகள் வசமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் இராணுவப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி புலிகள் கூறுகையில்;

மணலாறு கொக்குத்தொடுவாய் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை தாங்கள் முறியடித்ததில் 15 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

கடும் ஷெல் தாக்குதலை நடத்தியவாறு முன்னேற முயன்ற படையினர் மீது கடுமையான பதில் தாக்குதலை நடத்தி அவர்களை பழைய நிலைக்கு பலத்த இழப்புகளுடன் திருப்பியனுப்பினர்.

இதன் போது ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்தனர்.

மன்னாரில்....

மன்னாரில் வெள்ளிக்கிழமை அடம்பனுக்குத் தெற்கேயும் பரப்பாங்கண்டல் மற்றும் கீரிசுட்டான் பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இங்கும் புலிகள் பலத்த இழப்புகளைச் சந்தித்துள்ளதாக படையினர் கூறுகின்றனர்.

இங்கு நடைபெற்ற மோதல்களில் இரு படையினர் காயமடைந்ததாகவும் படையினர் கூறுகின்றனர்.

எனினும், மன்னாரில் பரப்பாங்கண்டல், சேத்துக்குளம் பகுதியூடாக முன்னகர்வை மேற்கொண்ட படையினர் மீது தாங்கள் நடத்திய கடும் தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டும் 7 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், மடுவைக் கைப்பற்றும் நோக்கில் கீரிசுட்டான் பகுதியிலிருந்து மற்றொரு படை நகர்வு மேற்கொள்ளப்பட்ட போது அதற்கெதிராக நடத்தப்பட்ட கடும் பதில் தாக்குதலில் 5 படையினர் கொல்லப்பட்டும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

Email this page Your Opinion Print this page
உதவி வழங்கமுன் நிலைமையை ஆராய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வருகை
அடுத்த சில தினங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுக்கும் என்கிறார் ஹக்கீம்
யாழ். கடல்நீரேரியில் படகில் சென்றோர் மீது துவக்கு சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்
மன்னார், மணலாறு பகுதிகளில் படையினர், புலிகள் கடும் மோதல்
ஹீத்துரு விமான நிலையத்தினுள் நுழைந்த தமிழ் இளைஞன் கைது
பல்கலைக்கழக அனுமதிக்கு 40 ஆயிரம் விண்ணப்பங்கள்
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
கிழக்கு மாகாண முன்னாள் இராணுவத் தளபதியை பழிவாங்கும் படலம் தொடர்வதாக குற்றச்சாட்டு
இரத்தினபுரியில் மாலை நேரங்களில் கடும் மழை, மண்சரிவு அபாயம்
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உலகிற்கு இலங்கை முன்னுதாரணம்
ரஷ்யாவிலிருந்து விமானப்படைக்கு 5 `மிக்- 29' விமானங்கள் கொள்வனவு
கொழும்பு மாநகரசபை தொடர்பாக முதலமைச்சர், ஆளுநர் ஜனாதிபதியை சந்திப்பர்
மின்னல் தாக்கி இளம்தாய் மரணம்
மன்னாரில் பொறிவெடியில் சிக்கி படையணி கட்டளை அதிகாரி மரணம்
அரச கரும மொழிகளை அனைத்து நிறுவனங்களிலும் அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தல்
இரு இளைஞர்களின் சடலங்கள் ஒப்படைப்பு
தென்மராட்சியில் கைவிடப்பட்ட கால்நடைகள் படையினரால் உரியவர்களிடம் கையளிப்பு
சவுதியில் மரண தண்டனை வழங்கப்பட்ட றிஷானா விடுதலை செய்யப்படும் சாத்தியம்
வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றமாக தரம் உயர்வு
போலி முகவர்கள் குறித்து சிங்கப்பூர் தூதரகம் எச்சரிக்கை
இசை வேள்வி இரண்டாம் நாள் நிகழ்வு இன்று தமிழக இசைக் கலைஞர் அருண் பாடுகிறார்
நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி மரணம்
வடக்கில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்தும் பெருமளவில் உதவி வருகின்றது
அதிரடிப்படை வீரர் பலி மூவர் படுகாயம்
தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்க ரூபவாஹினி ஊழியர்கள் முஸ்தீபு
கிழக்கு மாகாண சபைக்கு 37 உறுப்பினர்கள் தெரிவாவர்
திருமலை 5 மாணவர் படுகொலை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை `கொழும்பில் வீடு தருகிறோம்; விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாம்'
மின் கட்டண உயர்வை கண்டித்து மாத்தளையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்திக்கு `மாமனிதர் விருது' வழங்கி புலிகளின் தலைவர் கௌரவிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com