யாழ்.கடல்நீரேரியில் படகொன்றில் பயணம் செய்தவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமகனொருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடல்நீரேரியில் படகொன்றில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து படகு நிறுத்தப் படவே அங்கு சென்ற கடற்படையினர் அதிலிருந்த ஏழு பேரையும் கைதுசெய்ததுடன் படுகாயமடைந்தவரை யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் செல்வராஜா கோடீஸ்வரன் என்பவர் கொல்லப்பட்டார். கே. சுதாகரன் (28 வயது) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.