ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு 3200 பெண் வெள்ளைச் சுண்டெலிகள் தேவையென்ற விளம்பரத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு இவ்வாறு சுண்டெலிகள் தேவை என்றும் அவை ஒவ்வொன்றும் 18 கிராமிற்கு கூடுதலாக இருக்கக்கூடாதென்றும் விலைமனுக் கோரப்பட்டிருந்தது.
இவ்வாறு ஜனாதிபதி மாளிகையின் அறிவித்தலால் ஜனாதிபதி மாளிகைக்கு எதற்கு சுண்டெலிகள், எதற்கு பயன்படுத்தப் போகின்றார்கள் என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மாளிகையின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்;
எமது இவ் அறிவிப்புபற்றி ஒவ்வொருவரும் வியப்பாகக் கேட்கின்றனர். சுண்டெலி வேண்டுமென ஜனாதிபதி மாளிகையில் கேட்டிருப்பதால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கத்தான் செய்யும். தேவையில்லாமல் அறிவிப்பு செய்வார்களாவென தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்படும் பருந்துகளுக்கு உணவாகக் கொடுப்பதற்கோ அல்லது நச்சுப் பொருட்களை பரிசோதிப்பதற்காகவோ கொள்வனவு செய்யப்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 3200 சுண்டெலிகளை 16 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாக்கு விநியோகிப்பதற்கு ஒரு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.