Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சைக் கோரும் நவாஸ் தலைமையிலான கட்சி
[17 - March - 2008] [Font Size - A - A - A]
பாகிஸ்தானின் புதிய அரசில் பாதுகாப்பு அமைச்சர் பதவியைத் தங்கள் கட்சிக்குத் தர வேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சியும் நவாஸ் ஷரீப் கட்சியும் இணைந்து பாகிஸ்தானில் அரசு அமைக்க முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் முக்கியமான அமைச்சர் பதவியை யார் பெறுவது என்று இரு கட்சிகளிடையேயும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தேசிய சபைக் கூட்டம் வரும் 17 ஆம் திகதி நடைபெறுகிறது. அப்போது அமைச்சர்கள் பதவி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவிகளில் 54 சதவீதம் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், 40 சதவீதம் நவாஸ் ஷரீப் கட்சிக்கும் ஒதுக்குவது என்று இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

முக்கிய பதவிகளைப் பெறுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
சீனாவின் பிரதமராக மீண்டும் தெரிவானார் வென் ஜியாபோ
சர்தாரி மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு சுவிற்சர்லாந்துக்கு பாகிஸ்தான் அரசு கடிதம்
திபெத்தில் மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படலாமென தலாய்லாமா அச்சம்
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சைக் கோரும் நவாஸ் தலைமையிலான கட்சி
ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு சுண்டெலிகள் தேவையென்ற விளம்பரத்தால் பரபரப்பு
ஈரான் பொதுத் தேர்தலில் கடும்போக்குவாத கட்சி முன்னிலையில்
"மிக்-35 ரக இராணுவ விமான தொழில் நுட்பத்தை நிபந்தனையுடன் இந்தியாவுக்கு வழங்க தயார்"
பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை கைவிடத்தயார்; எதிர்க்கட்சிகளுடன் முஷாரப் பேரம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com