சீனாவின் பாராளுமன்றம் வென் ஜியாபோவை மீண்டும் பிரதமாராக தெரிவு செய்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களின் வரிசையில் மூன்றாம் இடத்திலிருக்கும் வென், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகாரத்தில் இருப்பதற்கான ஆணையை அந்நாட்டுப் பாராளுமன்றம் வழங்கியுள்ளளது.
இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளில் வென்னுக்கு 2926 ஆதரவு வாக்குகளும் 21 எதிரான வாக்குகளும் கிடைத்துள்ளன.
அத்துடன், நாட்டின் தலைமை நீதிபதியாக வோன் ஷெங்க்ஜுன்னும் தலைமை அரச தரப்பு வழக்கறிஞராக கா ஓ ஜியான்மிங்கையும் பாராளுமன்றம் தெரிவு செய்துள்ளது.
அத்துடன், இராணுவத்தின் மத்திய குழுவில் தீர்மானமெடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட துணைத் தலைவர் பதவிக்கு மக்கள் விடுதலை இராணுவத்தின் ஜெனரல்களான ஸூ கைஹோவும், குயோ பொக்ஸிங்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 5 துணைப் பிரதமர்கள், 4 மாநில கவுன்சிலர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் நியமனங்களையும் நேற்று மாலையளவில் பாராளுமன்றம் அங்கீகரிக்கும் என தெரிவிக்கபப்பட்டுள்ளது.
முதலாவது துணைப் பிரதமராக வென் ஜியாபோவுக்கு பின்னர் பிரதமர் பதவியை குறிவைத்துள்ள லி கிகியுவாங் தெரிவு செய்யப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.