Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஆசிரியர்களுக்கான புதிய சம்பளத் திட்டத்தை தொழிற்சங்கங்கள் முழுமையாக நிராகரிப்பு
[17 - March - 2008] [Font Size - A - A - A]
* இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை

தேசிய சம்பள ஆணைக்குழு முன்மொழிந்துள்ள புதிய சம்பளத் திட்டத்தை ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முற்றாக நிராகரிக்கத் தீர்மானித்துள்ளன.

கல்வியமைச்சு, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய சம்பள ஆணைக்குழு ஆகியவற்றுக்கிடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போதே, புதிய சம்பளத் திட்டத்தை நிராகரிப்பதென தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோஸப் ஸ்டாலின் கூறுகையில;

"அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் ஆசிரியர் சங்கங்கள் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தன. இதன்போது சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளும் புதிய திட்டம் வகுக்கப்பட்டு, அது உடன் வெளியிடப்படுமெனவும் அவர் கூறினார்.

அதன்படி சம்பள ஆணைக்குழு புதிய சம்பளத் திட்டத்தை வெளியிட்டது. அதனை ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒன்றுசேர்ந்து பரிசீலித்தன. எனினும் அதிபர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை அது பூர்த்தி செய்யவில்லை.

எனவே, புதிய சம்பளத்திட்டத்தை ஒன்றுபட்டு நிராகரிப்பதென ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. எமது தீர்மானத்தை இன்று கல்வியமைச்சிற்கும் தேசிய சம்பள ஆணைக்குழுவிற்கும் உத்தியோக பூர்வமாக அறிவிப்போம்.

இந்த அரசாங்கத்திற்கும் கல்வியமைச்சிற்கும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் நோக்கமில்லை. சம்பள முரண்பாடும் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாமலுள்ளது. காலத்தை இழுத்தடித்து ஏமாற்றுவதிலேயே இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் அதிபர், ஆசிரியர் ஏற்கும் நியாயமான சம்பளத் திட்டத்தை உரிய தரப்பினர் உடனடியாக முன்வைக்க வேண்டுமென்பதே எமது வலியுறுத்தலாகும்" என்றார்.

Email this page Your Opinion Print this page
`பிரபாகரனை' பார்க்க ஜனாதிபதிக்கு விருப்பம்
நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பல்லாயிரக்கணக்கானோர் நிர்க்கதி
வவுனியா பகுதியில் கிளைமோர் தாக்குதல்; இராணுவ அதிகாரி பலி
கிழக்கின் 3 மாவட்டங்களிலும் பெரு வெள்ளம்
ஆசிரியர்களுக்கான புதிய சம்பளத் திட்டத்தை தொழிற்சங்கங்கள் முழுமையாக நிராகரிப்பு
இந்தியாவை உடனடியாக தலையிட தமிழ் கூட்டமைப்பு வலியுறுத்தல்
கிண்ணியா பகுதியில் இளைஞன் சுட்டுக் கொலை
மன்னார் - தலைமன்னார் வீதியில் ரோந்து சென்ற பொலிஸார் மீது தாக்குதல்; ஒருவர் பலி
தினமும் சனநடமாட்டமுள்ள இடங்களில் கட்டவிழ்த்து விடப்படும் குண்டுப்புரளி
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தம்
ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இன்று வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு
நீர்கொழும்பில் சனிக்கிழமை இரவு பெய்த மழை 16 கிராமசேவையாளர் பிரிவுகளில் வெள்ளம்
விடுதலைப் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான இளைஞர்களை அர்ப்பணித்தது கிழக்கு மக்கள்
கொள்ளை கோஷ்டியினரால் கடத்தப்பட்ட இளைஞன் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு
`மோசமடைந்துவரும் இலங்கை நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகச் செயற்பட வேண்டும்'
களனியிலுள்ள ஊடகவியலாளர்களின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் தேடுதல்
`ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எமது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்'
கொழும்பு சங்கமித்த மாவத்தையில் தங்கியிருந்த யாழ்.இளைஞர் ஆயுதபாணிகளால்
உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை 27 ஆயிரத்து 700 ரூபாவாக அதிகரிப்பு
யாழ்.மாவட்ட அனைத்து இலங்கை வங்கிக் கிளைகளும் ஞாயிறு முதல் கணினி வலைப்பின்னலில் இணைவு
சிக்குன்குன்யா நோயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபை நடவடிக்கை
பிரதி பொலிஸ்மா அதிபராக 10 பொலிஸ் அத்தியட்சர்களுக்கு பதவி உயர்வு
வட, கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கு இதுவரை இலவச பாடநூல்கள் முழுமையாக கிடைக்கவில்லை
மன்னார், வவுனியா மருத்துவர்கள் மதவாச்சியூடாக துரிதமாக பயணம் செய்ய புதிய நடைமுறை
வவுனியாவில் சனிக்கிழமை இரவு அடைமழை
பேராதனையில் விஷமிகள் சிலரால் சிங்களப் பாடசாலைக்கு தீவைப்பு
மகரகம ரயில் நிலைய வளாகத்தில் 7 கடைகள் தீக்கிரை
ஏப்ரல் இறுதி வரை மழை தொடரும் சாத்தியம்
கோணகும்புற வீதி விபத்தில் குடும்பப் பெண் மரணம்
காணாமல்போன 5 மீனவர்களும் மீட்பு
அதிக கட்சிகள் களம் இறங்கினால் வன்முறைகளும் அதிகரிக்கும் சாத்தியம்
இரு சடலங்கள் வன்னிக்கு அனுப்பிவைப்பு
இளம் குடும்பஸ்தரை காணவில்லையென முறையீடு
சீருடையில் சென்று இரு மாணவர்கள் கொள்ளை
சுற்றாடலை சுத்தமாக பேணத்தவறும் உள்ளூராட்சி மன்றங்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சகிப்புணர்வு,விட்டுக்கொடுப்பை வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் சமாதானப்பேரணி
யாழ். மாவட்டத்தில் தொழில் பயிற்சி வழங்கக்கூடிய அடிப்படை தகுதியுடன் சாவகச்சேரி அறவழிப் போராட்டக்குழு
யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிவாரி பரீட்சைகள் வவுனியாவிலும் நடைபெறும்
ஜனசுவய வேலைத்திட்டத்தின் கீழ் 7300 பெண்களுக்கு சுயதொழில் முயற்சி
`நியமன எம்.பி.பதவியை வழங்கும் வாக்குறுதியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நிறைவேற்றவில்லை'
காசநோய் தடுப்பு தினத்தையொட்டி பல்வேறு திட்டங்கள் அமுலாகிறது
`புலிகளின் தலைவர் தொடர்பாக தெற்கில் பரவிய தகவல்களெல்லாம் பொய்யானவை'
அரசின் கபடநாடகத்தை அம்பலமாக்குவதற்காக தமிழ் கூட்டமைப்பு கிழக்கு தேர்தலில் போட்டியிடுவது அவசியம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com