Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கின் 3 மாவட்டங்களிலும் பெரு வெள்ளம்
[17 - March - 2008] [Font Size - A - A - A]
கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழையால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக கடும் மழை பெய்து வரும் அதே நேரம் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கடும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

மட்டக்களப்பில்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழைகாரணமாக தாழ்நிலப் பகுதிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளிலும் போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. மன்னம்பிட்டி பாலத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும், பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பயணங்களை மேற்கொள்ள முடியாது பொதுமக்கள் அவதியுறுகின்றனர். சிறிய ரகவாகனங்களை பாலத்தினூடாக செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

பெரு வெள்ளத்தினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் தொற்று நோய்கள் பரவும் ஆபத்தும் காணப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மூன்று நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் பரவலாக இரவு பகலாக கடும் மழை பெய்து வருகிறது.

தென்எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவும், போரதீவுப்பற்று பிரதேச பிரிவும் வெள்ளத்தால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மூங்கிலாறு பாலத்தில் மூன்றரை அடிக்குமேல் நீர்பாய்ந்து செல்வதால் போக்குவரத்துதுண்டிக்கப்பட்டு தோணிகள், வள்ளங்கள் மூலமே தமது பயணங்களை அச்சத்துடன் தொடர வேண்டியநிலை தோன்றியுள்ளது.

மாவட்டத்திலுள்ள பெருமளவான பாட சாலைக் காணிகளுக்குள்ளும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

சில பாடசாலைகளை இன்று திங்கட்கிழமை திறந்து நடாத்த முடியாதவாறு வகுப்பறைகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளதாக பாட சாலைகளின் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

இம் மாவட்டப் பாடசாலைகளில் அடுத்த வாரம் முதலாந் தவணைப் பரீட்சையினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருக்கும் தருணத்திலேயே தொடர் மழை பெய்து கொண்டிருக்கின்றது. இதனால் பரீட்சைகளை நடத்துவதிலும் தடங்கல்கள் ஏற்படக்கூடுமென அஞ்சப்படுகிறது.

வெள்ளம் காரணமாக இப் பிரதேசத்திலுள்ள மலசல கூடங்கள் பலவும் நிறைந்து வீதிகளிலும், வீட்டு முற்றங்களிலும் அசுத்த நீர் பரவி ஓடுகின்றன. இதனால் பல இடங்களில் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு பல்வேறு அசௌகரியங்களும் ஏற்பட்டிருப்பதாக புகார்கள் வந்தவண்ணமிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் இடைவிடா அடை மழைகாரணமாக பெரும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் அவலங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக மாவட்டத்தின் கரையோரப் பிர தேசங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் கிராமங்களின் தாழ்ந்த பகுதிகளில் வெள்ளம் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இக்கிராமங்களின் உள்ளூர் வீதிகளெங்கும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன.

நிந்தவூர், காரைதீவு, மாளிகைக் காடு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக் குடியிருப்பு, துரவந்தியமேடு, மணற் சேனை, உட்பட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த பல கிராமங்களும் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

நிந்தவூரில் மத்திய வடிச்சல் வாய்க்கால் பெருக்கெடுத்துள்ளதால் அதன் இரு மருங்கிலுமுள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் பெரும் அவலத்திற்குள்ளாகினர்.

நிந்தவூர் பிரதேசசபைத்தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் (அஷ்ரப்), பிரதி தவிசாளர் ஏ.எல்.எம்.சாலிஹு உட்பட உறுப்பினர்கள் பலரும் வெள்ள நீரை வடிந்தோடச் செய்யும் நடவடிக்கையில் இரவு, பகலாக ஈடுபட்டனர்.

இதேவேளை கல்முனை மாநகரசபைப் பிரிவுக்குட்பட்ட தமிழ், முஸ்லிம் கிராமங்களில் ஏற்பட்ட வெள்ள நீரை கடலுக்கு வடிந்தோடச் செய்யும் நடவடிக்கைகளில் மாநகர மேயர் ஏ.ஆர்.அஜ்மீர், எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் உட்பட உறுப்பினர்களும் நேற்று நேரில் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் நேற்று ஞாயிறு காலை 8.30 மணிவரை அம்பாறை மாவட்டத்தில் 112.4 மில்லி மீற்றர் மழை பெய்ததாக பொத்துவில் வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.சாலிஹீன் தெரிவித்தார்.

இம் மாதம் முதலாம் திகதி முதல் நேற்று 16 ஆம் திகதி வரை 210.9 மில்லி மீற்றர் மழை மாவட்டத்தில் பெய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 16 ஆம் திகதி வரை 833.2 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகவும் சாலிஹீன் மேலும் தெரிவித்தார்.

நிந்தவூர்ப்பிரதேசத்தில் பெரும் போக நெற்செய்கை மேற்கொண்டு அறுவடைக்குத் தயாரான நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்காணிகள் மழை வெள்ளத்தால் பெருநாசமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் சில பாடசாலைக் கட்டிடங்களிலும் நீர் பரவிக் காணப்படுவதால் சில பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாதுள்ளதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வருடத்தின் முதலாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பிக்கும் தறுவாயில் இவ்வாறான நிலமை ஏற்பட்டுள்ளது.

திருகோணமலையில்...

திருகோணமலையில் அடைமழை தொடர்ந்து பெய்கிறது. சனிக்கிழமை மாலை மீண்டும் ஆரம்பமான மழை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடர்கிறது. நகரின் புறநகர்ப் பிரதேசங்களில் தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கின. மூதூர், தம்பலகாமம், கந்தளாய், கிண்ணியா, பன்குளம் பகுதிகளிலும் கடும் மழை பெய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Email this page Your Opinion Print this page
`பிரபாகரனை' பார்க்க ஜனாதிபதிக்கு விருப்பம்
நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பல்லாயிரக்கணக்கானோர் நிர்க்கதி
வவுனியா பகுதியில் கிளைமோர் தாக்குதல்; இராணுவ அதிகாரி பலி
கிழக்கின் 3 மாவட்டங்களிலும் பெரு வெள்ளம்
ஆசிரியர்களுக்கான புதிய சம்பளத் திட்டத்தை தொழிற்சங்கங்கள் முழுமையாக நிராகரிப்பு
இந்தியாவை உடனடியாக தலையிட தமிழ் கூட்டமைப்பு வலியுறுத்தல்
கிண்ணியா பகுதியில் இளைஞன் சுட்டுக் கொலை
மன்னார் - தலைமன்னார் வீதியில் ரோந்து சென்ற பொலிஸார் மீது தாக்குதல்; ஒருவர் பலி
தினமும் சனநடமாட்டமுள்ள இடங்களில் கட்டவிழ்த்து விடப்படும் குண்டுப்புரளி
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தம்
ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இன்று வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு
நீர்கொழும்பில் சனிக்கிழமை இரவு பெய்த மழை 16 கிராமசேவையாளர் பிரிவுகளில் வெள்ளம்
விடுதலைப் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான இளைஞர்களை அர்ப்பணித்தது கிழக்கு மக்கள்
கொள்ளை கோஷ்டியினரால் கடத்தப்பட்ட இளைஞன் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு
`மோசமடைந்துவரும் இலங்கை நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகச் செயற்பட வேண்டும்'
களனியிலுள்ள ஊடகவியலாளர்களின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் தேடுதல்
`ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எமது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்'
கொழும்பு சங்கமித்த மாவத்தையில் தங்கியிருந்த யாழ்.இளைஞர் ஆயுதபாணிகளால்
உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை 27 ஆயிரத்து 700 ரூபாவாக அதிகரிப்பு
யாழ்.மாவட்ட அனைத்து இலங்கை வங்கிக் கிளைகளும் ஞாயிறு முதல் கணினி வலைப்பின்னலில் இணைவு
சிக்குன்குன்யா நோயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபை நடவடிக்கை
பிரதி பொலிஸ்மா அதிபராக 10 பொலிஸ் அத்தியட்சர்களுக்கு பதவி உயர்வு
வட, கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கு இதுவரை இலவச பாடநூல்கள் முழுமையாக கிடைக்கவில்லை
மன்னார், வவுனியா மருத்துவர்கள் மதவாச்சியூடாக துரிதமாக பயணம் செய்ய புதிய நடைமுறை
வவுனியாவில் சனிக்கிழமை இரவு அடைமழை
பேராதனையில் விஷமிகள் சிலரால் சிங்களப் பாடசாலைக்கு தீவைப்பு
மகரகம ரயில் நிலைய வளாகத்தில் 7 கடைகள் தீக்கிரை
ஏப்ரல் இறுதி வரை மழை தொடரும் சாத்தியம்
கோணகும்புற வீதி விபத்தில் குடும்பப் பெண் மரணம்
காணாமல்போன 5 மீனவர்களும் மீட்பு
அதிக கட்சிகள் களம் இறங்கினால் வன்முறைகளும் அதிகரிக்கும் சாத்தியம்
இரு சடலங்கள் வன்னிக்கு அனுப்பிவைப்பு
இளம் குடும்பஸ்தரை காணவில்லையென முறையீடு
சீருடையில் சென்று இரு மாணவர்கள் கொள்ளை
சுற்றாடலை சுத்தமாக பேணத்தவறும் உள்ளூராட்சி மன்றங்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சகிப்புணர்வு,விட்டுக்கொடுப்பை வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் சமாதானப்பேரணி
யாழ். மாவட்டத்தில் தொழில் பயிற்சி வழங்கக்கூடிய அடிப்படை தகுதியுடன் சாவகச்சேரி அறவழிப் போராட்டக்குழு
யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிவாரி பரீட்சைகள் வவுனியாவிலும் நடைபெறும்
ஜனசுவய வேலைத்திட்டத்தின் கீழ் 7300 பெண்களுக்கு சுயதொழில் முயற்சி
`நியமன எம்.பி.பதவியை வழங்கும் வாக்குறுதியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நிறைவேற்றவில்லை'
காசநோய் தடுப்பு தினத்தையொட்டி பல்வேறு திட்டங்கள் அமுலாகிறது
`புலிகளின் தலைவர் தொடர்பாக தெற்கில் பரவிய தகவல்களெல்லாம் பொய்யானவை'
அரசின் கபடநாடகத்தை அம்பலமாக்குவதற்காக தமிழ் கூட்டமைப்பு கிழக்கு தேர்தலில் போட்டியிடுவது அவசியம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com