* 3 படையினர் காயம்
வவுனியா மரக்காரம்பளை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இராணுவ அதிகாரியொருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
தாண்டிக்குளம்- கல்மடு வீதியில் மரக்காரம்பளை பகுதியிலேயே அதிகாலை 1.30 மணியளவில் இந்தக் கிளைமோர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் இதில் அந்தக் கண்காணிப்புக் குழுவுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரியே கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் இரவு நேரத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய முதலாவது கிளைமோர் தாக்குதல் இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து நேற்றுக் காலை அந்தப் பகுதியில் படையினர் பலத்த தேடுதல்களை மேற்கொண்டனர்.