`பிரபாகரனை' பார்க்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்துள்ளார்.
இளம் சிங்கள பட இயக்குநரான துஷார பீரிஸ் இயக்கியுள்ள `பிரபாகரன்' என்ற படத்திற்கு அண்மையில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன தணிக்கை சபை அனுமதி வழங்கியிருந்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தப்பியோடும் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரைப் பற்றிய கதையே பிரபாகரனாகும்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தினரின் பூரண ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட `பிரபாகரன்' திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் திரையிடப்படவுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் பிரத்தியேக காட்சிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திலுள்ள திரையரங்கில் சிரேஷ்ட இராணுவத் தளபதிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவும் இந்தத் திரைப்படத்தை பார்வையிட்டுள்ளார்.
இந்தப் படத்தை பார்க்க விரும்புவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இப்படம் திரைக்கு வரும்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.