Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sinhala news
டென்மார்க்கில் புலிகளுக்கு எதிராக கெஸ்ரிஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
[17 - March - 2008] [Font Size - A - A - A]
புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஷ்ரீலங்கா அரசுக்கும் படையினருக்கும் எதிராக மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, ஐரோப்பிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் மூலம் செய்து வரும் போலியான பிரசார நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, அண்மையில் டென்மார்க் நாட்டில் அதன் தலைநகர் ஹொப்பன்ஹெகனில் தீவிர ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தனர். புலிகளின் இந்தப் போலிப் பிரசாரங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவும் அதன் பின்னர் டென்மார்க்கில் வசிக்கும் ஷ்ரீலங்கா நாட்டவர்கள் ஹொப்பன் ஹெகனில் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்துள்ளனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஷ்ரீலங்கா நாட்டவர்களால் அமைக்கப்பட்ட "ஷ்ரீலங்கா கெஸ்ரிஸ்" எனப்படும் அமைப்பே ஏற்பாடு செய்திருந்தது. புலிகள் இயக்கப்பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான படுகொலைகள் உட்பட, பயங்கரவாத நடவடிக்கைகளை டென்மார்க் மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் புலிகளின் படுகொலைகள், குண்டுத்தாக்குதல்களைக் காண்பிக்கும் புகைப்படங்களை ஏந்தியவாறு ஹெஸ்பன்ஹெகன் பிரதான வீதிகளில் ஷ்ரீலங்கா நாட்டவர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை செய்தனர். டென்மார்க்கில் செயற்படும் ஷ்ரீலங்கா கெஸ்ரிஸ் அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியுள்ளனர்.

திவயின:15.03.2008

Email this page Your Opinion Print this page
புலிகளுக்கும் பாதாளக்குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு!
டென்மார்க்கில் புலிகளுக்கு எதிராக கெஸ்ரிஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com