அவுஸ்திரேலியா தொடரை இரத்துச் செய்துள்ளது மிகுந்த வருத்தமளிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கப்டன் இன்சமாம் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யவிருந்த அவுஸ்திரேலியா லாகூர் இரட்டைக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தொடரை இரத்துச் செய்வதாக அறிவித்தது. இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) நடத்தும் ருவென்ரி -20 போட்டியில் லாகூர் பாட்ஷா அணிக்கு கப்டனாக உள்ள இன்சமாம் இதுபற்றிக் கூறுகையில்;
"அவுஸ்திரேலியா தொடரை இரத்துச் செய்யும் முடிவை எடுத்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. இதுபற்றி இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் விரிவாக கலந்தாலோசித்திருக்கலாம். அவசரமாக முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உலகளவில் சவால் தரும் அணிகளுடன் அதிக தொடர்களில் பங்கேற்று பாகிஸ்தான் அணி வளர்ச்சி காண வேண்டும்.
இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடர் இரத்து செய்யப்பட்ட செய்தி கவலையைத் தருகிறது " என்றார்.