Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஒரு நாள் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசை தென்ஆபிரிக்க கப்டன் ஸ்மித் முதலிடத்தில்
[17 - March - 2008] [Font Size - A - A - A]
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்ட தர வரிசையில் தென்ஆபிரிக்க அணிக்கப்டன் ஸ்மித், டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடம் பிடித்துள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்திய வீரர் டெண்டுல்கர் முதலிடம் பிடித்தார். முக்கோணப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதியாட்டத்தில் சிறப்பாக ஆடியதன் மூலம் முதலிடத்தை டெண்டுல்கர் பிடித்திருந்தார். பங்களாதேஷுக்கு எதிரான 3 நாள் போட்டித் தொடரில் தென் ஆபிரிக்க அணி 3-0 என்ற தொடரைக் கைப்பற்றியது. அந்தப் போட்டித் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற தென்ஆபிரிக்க அணித் கப்டன் ஸ்மித் (792 புள்ளிகள்) 3 ஆவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய வீரர் டெண்டுல்கர் (777 புள்ளிகள்) 2 ஆவது இடத்திலும் அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் (770 புள்ளிகள்) 3 ஆவது இடமும் பிடித்துள்ளனர். இந்திய அணிக் கப்டன் தோனி 10 ஆவது இடத்திலிருக்கிறார்.

பந்து வீச்சாளர் வரிசையில் நியூசிலாந்து வீரர் வெட்டோரி (790 புள்ளிகள்) முதலிடம் பிடித்துள்ளார். அவுஸ்திரேலிய வீரர் பிராக்கென் (770 புள்ளிகள்) 2 ஆவது இடமும் நியூசிலாந்து வீரர் பொண்ட் (736 புள்ளிகள்) 3 ஆவது இடமும் பெற்றுள்ளனர்.

சகல துறை வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் வீரர் சொயிப் மாலிக் முதலிடம் வகிக்கிறார்.

Email this page Your Opinion Print this page
இங்கிலாந்துடனான 2 ஆவது டெஸ்டில் தோல்வியடையும் நிலையில் நியூஸிலாந்து
`தென்ஆபிரிக்க அணி தொடர்ந்தும் முதலிடத்திலிருக்க அவுஸ்திரேலியாவுடன் 2 தொடரில் வெல்லவேண்டும்'
`கிரிக்கெட் போட்டிகளில் எவருமே துறவிகள் போல் செயல்பட முடியாது'
ஒரு நாள் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசை தென்ஆபிரிக்க கப்டன் ஸ்மித் முதலிடத்தில்
`பாகிஸ்தானுக்கு அவுஸ்திரேலிய அணி வராதது மிகுந்த வருத்தமளிக்கிறது'
சர்ச்சையில் மீண்டும் சிக்கிய அக்தரை காப்பாற்ற இந்திய கிரிக்கெட் சபை முயற்சி
ஐ.சி.எல்.லிலிருந்து விலகினார் லாரா? ஐ.பி.எல்.லில் இணையப் போகிறார்
ஹர்பஜனோடு சமரசம் ; தயாரெனக் கூறுகிறார் ஹைடன்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com