Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
இங்கிலாந்துடனான 2 ஆவது டெஸ்டில் தோல்வியடையும் நிலையில் நியூஸிலாந்து
[17 - March - 2008] [Font Size - A - A - A]
இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளிடையே வெலிங்டனில் நடைபெறும் 2 ஆவது டெஸ்டில், நியூஸிலாந்து அணி தோல்வியுறும் நிலையிலுள்ளது.

நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வருகிறது. முதல் இனிங்ஸில் இங்கிலாந்து 342, நியூஸிலாந்து 198 ஓட்டங்கள் எடுத்தன. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து இரண்டாவது இனிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

நேற்று முன்தினம் மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கொலிங்வூட் சிறப்பாக விளையாடி அரைசதம் (59) அடித்தார். இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், நேற்று முன்தினம் தான் முதல்முறையாக சிச்சர் அடித்தார். 60 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மில்ஸ் பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.

கப்டன் வோகன் 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்டிராஸ் 44 ஓட்டங்களும் பெல் 41 ஓட்டங்களும் எடுத்து ஓரம் பந்தில் வெளியேறினர். முதல் இனிங்ஸில் சதமடித்த விக்கெட் கீப்பர் அம்புரோஸ் 5 ஓட்டங்களில் ஓரம் பந்தில் வெவிலியன் திரும்பினார். நியூஸிலாந்து வீரர்களின் களத்தடுப்பு மிக மோசமாக இருந்தது. இலகுவான கேட்ச்களை கோட்டை விட்டனர். களத்தடுப்பில் சிறப்பாக செயல்பட்டிருந்தால் இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை இன்னும் குறைத்திருக்க முடியும்.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து, இரண்டாவது இனிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பனேசரும் அண்டர்சனும் களத்திலிருந்தனர். நியூஸிலாந்து வீரர் ஓரம் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாலாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், இங்கிலாந்து அணி 293 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

438 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் நியூஸிலாந்து அணி 2 ஆவது இனிங்ஸில் ஆடி வருகிறது. நேற்று 4 ஆம் நாள் ஆட்டமுடிவில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதில் ரெயிலர்-55, மக்குலம் ஆட்டமிழக்காது-43, சின்கிளேயர் -39, பிளமிங்-31, பெல்-29 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சைற்பொட்டம் - 3, புரோட் -2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

நியூஸிலாந்து இந்தப் போட்டியில் வெற்றி பெற 438 ஓட்டங்களுக்கு மேல் தேவை என்ற இக்கட்டான நிலையிலிருந்தது. இந்த இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றால், டெஸ்ட் கிரிக்ெகட் வரலாற்றில் 4 ஆவது இனிங்ஸில் அதிக ஓட்டங்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை அந்த அணி அடையும்.

இதற்கு முன் அன்டிகுவாவில் 2002 - 03 இல், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணி 4 ஆவது இனிங்ஸில் 418 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதுவே 4 ஆவது இனிங்ஸில் சேஸ் செய்து வெற்றி பெற்ற அதிக பட்ச ஓட்டமாகும்.

இன்னும் ஒரு நாள் மீதமுள்ள நிலையில், நியூஸிலாந்து அணி தப்புவது கடினம். இப்போட்டியில் வென்றால் இங்கிலாந்து தொடரில் சமநிலை (1-1) பெறலாம்.

ஓரத்துக்கு அபராதம்: இங்கிலாந்தின் சைற் பொட்டம் பந்தில், நியூஸிலாந்து வீர் ஜேக்கப் ஓரம், எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டமிழந்தார். நடுவர் டேவிசின் இந்தத் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்தார் ஓரம். இது ஐ.சி.சி., விதிமுறைப்படி தவறு. இதையடுத்து அவரது சம்பளத்திலிருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதாக போட்டி நடுவர் ஜவகல் ஷ்ரீநாத் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
இங்கிலாந்துடனான 2 ஆவது டெஸ்டில் தோல்வியடையும் நிலையில் நியூஸிலாந்து
`தென்ஆபிரிக்க அணி தொடர்ந்தும் முதலிடத்திலிருக்க அவுஸ்திரேலியாவுடன் 2 தொடரில் வெல்லவேண்டும்'
`கிரிக்கெட் போட்டிகளில் எவருமே துறவிகள் போல் செயல்பட முடியாது'
ஒரு நாள் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசை தென்ஆபிரிக்க கப்டன் ஸ்மித் முதலிடத்தில்
`பாகிஸ்தானுக்கு அவுஸ்திரேலிய அணி வராதது மிகுந்த வருத்தமளிக்கிறது'
சர்ச்சையில் மீண்டும் சிக்கிய அக்தரை காப்பாற்ற இந்திய கிரிக்கெட் சபை முயற்சி
ஐ.சி.எல்.லிலிருந்து விலகினார் லாரா? ஐ.பி.எல்.லில் இணையப் போகிறார்
ஹர்பஜனோடு சமரசம் ; தயாரெனக் கூறுகிறார் ஹைடன்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com