Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
புற்றுநோயை உடலில் பரவச்செய்யும் மரபணுக்களை ஊக்குவிக்கும் என்சைம் கண்டுபிடிப்பு
[18 - March - 2008] [Font Size - A - A - A]
புற்றுநோயை உடலில் பரவச் செய்யும் மரபணுக்களை ஊக்கப்படுத்தும் என்சைம்களை (Enzyme) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இக்கண்டுபிடிப்பின் மூலம், புற்றுநோயாளிகளுக்குத் தரும் மருந்தை வீரியம் உள்ளதாக மாற்ற இந்த கண்டுபிடிப்பு பயன்படக்கூடும்.

ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லூயி கேன்ட்லி என்பவர் தலைமையிலான குழு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது.

புற்றுநோய் மரபணுக்கள் கட்டுப்பாடின்றி வளர உடலில் உள்ள குளுக்கோஸ்களை அதிகம் சாப்பிடுகிறது.

அந்தச் செயலுக்குத் துணைபுரியும் என்சைம் `பைருவேட் கினாே\u2970?' என்று அழைக்கப்படுகிறது. அதிலும் இருவகை இருக்கிறது. அதில் "பிகேஎம்-2" என்று அடையாளம் காணப்பட்டுள்ள என்சைம்தான் அதிக அளவில் குளுக்கோஸைச் சாப்பிட வைக்கிறது.

இந்த என்சைமைக் குறைந்தாலோ, கட்டுப்படுத்தினாலோ புற்றுநோயின் வீரியத்தைக் குறைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஆய்வுகூடத்தில் உள்ள எலிக்கு இந்த என்சைமைக் கொடுத்தும், நீக்கியும் சோதித்ததில் இது ஊர்ஜிதம் ஆனது. ஆனாலும் மேலும் சில சோதனைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.

75 ஆண்டுகளுக்கு முன்னால் நோபல் பரிசு வாங்கிய ஜேர்மனிய அறிஞர் ஆட்டோ வார்பர்க் என்பவர், புற்றுநோய் செல்கள் அதிக அளவில் குளுகோஸ்களைச் சாப்பிடுகிறது என்று கண்டுபிடித்தார்.

ஆனால் அவரால் அதற்குக் காரணமான என்சைம் எது என்று திட்டவட்டமாகக் கண்டு பிடிக்க முடியவில்லை.

Email this page Your Opinion Print this page
புற்றுநோயை உடலில் பரவச்செய்யும் மரபணுக்களை ஊக்குவிக்கும் என்சைம் கண்டுபிடிப்பு
கொங்கோவில் நடைபெற்று வரும் மோதல்களில் 68 பேர் பலி; அதிகளவானோர் காயம்
மழையைக் கொடுக்கும் பக்டீரியா அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் சர்தாரியின் சகோதரி
உலகெங்கிலும் கோடிக்கணக்கானோரை காசநோய் பாதிக்கும் அபாயம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com