Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பாடசாலை பஸ்ஸிலிருந்து குண்டு மீட்பு பெல்மதுளை நகரில் பெரும் பதற்றம்
[18 - March - 2008] [Font Size - A - A - A]
* பெற்றோர் பீதி; பாடசாலைகள் மூடப்பட்டன

பெல்மதுளை பிரதான நகரில் அமைந்துள்ள தேசிய பாடசாலை ஒன்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பாடசாலை பஸ்ஸிலிருந்து குண்டொன்றை நேற்று இராணுவத்தினர் மீட்டு செயலிழக்க வைத்துள்ளனர்.

பானகொடையிலிருந்து பெல் மதுளை பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி வரும் தனியார் பஸ்ஸிலிருந்தே இந்த குண்டு மீட்கப்பட்டது.

சம்பவதினம் காலை 9.30 மணியவில் குறிப்பிட்ட பஸ்ஸில் மர்மப் பார்ஷல் ஒன்று இருப்பதாக பொலிஸார் அவசர சேவைக்கு (119) பஸ் சாரதி தெரிவித்ததைத் தொடர்ந்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து குறிப்பிட்ட மர்மப் பார்ஷலை பரிசோதனை செய்தனர். இதனையடுத்து அந்தப் பார்ஷலில் இருந்தது குண்டென கண்டறியப்பட்டு இது தொடர்பில் குருவிட்ட இராணுவ முகாமிற்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த இராணுவத்தினர் குண்டினை மீட்டு பெல்மதுளை கங்கந்த மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் வைத்து செயலிழக்கச் செய்தனர்.

பாடசாலை பஸ்ஸிலிருந்து குண்டு மீட்கப்பட்ட செய்தி நகரம் முழுதும் பரவியதனைத் தொடர்ந்து பெற்றோர் தமது பிள்ளைகளை தேடி பாடசாலைகளுக்கு விரைந்ததனால் பதற்றம் அதிகரித்தது. அத்துடன், பல பாடசாலைகள் நேரத்துடன் மூடப்பட்டன. இதனால், காலையில் நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடத்தினர்.

Email this page Your Opinion Print this page
364 தொழிற்சங்கங்கள் இன்று தீர்மானம்
30 ஆண்டுகளின் பின் அநுராவுக்கு இறுதி விடை கொடுத்தது பாராளுமன்றம்
வடக்கு களமுனைகளில் உக்கிரமோதல் 3 படையினர், 30 புலிகள் உயிரிழப்பு
பாடசாலை பஸ்ஸிலிருந்து குண்டு மீட்பு பெல்மதுளை நகரில் பெரும் பதற்றம்
அரச பயங்கரவாதம் தொடர்ந்தால் ஆறாவது மகிந்தனும் இரண்டாவது வரதராஜப்பெருமாளும் தலையெடுப்பர்
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி
முன்னாள் பிரதி சபாநாயகர் சரத் முனசிங்க காலமானார்
இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து ஜேர்மனியில் பேரணி
மன்னாரை நேற்றிரவு உலுக்கிய ஷெல் சத்தம்
தன்னை காப்பாற்றுமாறு எனது மகன் எழுப்பிய அவலக்குரல் எனக்கு கேட்டது
உத்தியோகபூர்வமற்ற தணிக்கையை மேற்கொள்ளவே அரச, தனியார் ஊடகங்கள் மீது அச்சுறுத்தல்கள்
வான்- மோட்டார் சைக்கிள் விபத்தில் ஊடகவியலாளர் படுகாயம்; மகன் பலி
அநுராவுக்கு மரியாதை செலுத்தும் முகமாக பாராளுமன்ற அமர்வை ரத்து செய்யுங்கள்
அநுராவின் மறைவுக்கு போகொல்லாகம கவலை
`அநுராவின் மறைவு அரசியல் அரங்கில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது'
வெளிநாடு செல்வதற்காக மோதரையில் தங்கியிருந்த கணவனை காணவில்லையென மனைவி முறையீடு
அம்பாறை மாவட்டத்தில் கொட்டும் அடைமழை சாய்ந்தமருதில் 6500 குடும்பங்கள் பாதிப்பு
குடாநாட்டில் 50 வருடங்களின் பின் இம் மாதமே அதிக கோடை மழை
முஸ்லிம் கலாசார விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
பொதுக் கல்வியுடன் சமயக் கல்வியை வழங்கும் போதே நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க முடியும்
இலங்கை இளைஞர் பாராளுமன்ற இரண்டாம் சுற்று அமர்வு
மலையக தமிழ் மாணவர்கள் விளையாட்டுத் துறையிலும் ஒழுக்க விழுமியங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்
இந்திய வம்சாவளி மக்களுக்கு தனியான சிறப்பிடத்தைப் பெற்றுக்கொடுத்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்
கமநெகும திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிகளும் அபிவிருத்தி செய்யப்படும்
தல்தெனை சிறைச்சாலையிலுள்ள 600 கைதிகளுக்கு விசேட தொழிற்பயிற்சி
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் யோசனை மூலம் தமிழ் மொழி பயன்பாட்டிற்கு குழிபறிப்பு
கலேவெல பிரதேசத்தில் யானைக்கால் நோய் பரவும் அபாயம்; விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு `சமானம்' சஞ்சிகை வடக்கு, கிழக்கு மாகாண கல்வியமைச்சினால் வெளியீடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com