|
364 தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடி ரூபவாஹினி ஊழியர்களுக்கு எதிரான அடாவடித்தனங்கள் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை முக்கிய தீர்மானம் மேற்கொள்ளவுள்ளன.
ஜே.வி.பி. எம்.பி. லால்காந்த தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஊடக அடக்கு முறையைக் கண்டித்தும் ரூபவாஹினி ஊழியர்களுடைய பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் அவ்வூழியர்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்குமாக தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிப்பது பற்றியும் இதன் போது ஆராயப்படவுள்ளது. |