Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஹர்பஜனுடனான மோதல் குறித்து மிகவும் மனம் வருந்துகிறார் ஹைடன்
[18 - March - 2008] [Font Size - A - A - A]
"வார்த்தைகளை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தவில்லை. ஹர்பஜனை உப்புக்கு சப்பாணி என விமர்சித்தது தவறு தான். அதற்காக வருந்துகிறேன்" என அவுஸ்திரேலிய வீரர் மத்யூ ஹைடன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த முக்கோண ஒருநாள் தொடரில் இந்திய அணி, அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. இத்தொடர் முழுவதும் இரு அணி வீரர்களும் அடிக்கடி வார்த்தை போரில் ஈடுபட்டனர். ஹர்பஜன் தன்னை குரங்கு என கேலி செய்ததாக அன்றூ சைமண்ட்ஸ் குற்றஞ்சாட்டினார்.

அதிரடி தொடக்க வீரர் மத்யூ ஹைடன், ஹர்பஜனை `உப்புக்கு சப்பாணி' என வெளிப்படையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இப்படி பிரச்சினைகள் அனைத்தும் ஹர்பஜனை சுற்றி சுற்றி வந்தன. 18 ஆம் திகதி தொடங்கவிருக்கும் ஐ.பி.எல். `ருவென்ரி - 20' தொடரில் சென்னை அணிக்காக ஹைடன் பங்கேற்கிறார். இந்நிலையில் "ஹர்பஜனை தான் திட்டியது தவறு. அதற்காக வருந்துகிறேன்" என ஹைடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,

"எனது விமர்சனத்தை ஹர்பஜன் எப்படி எடுத்துக் கொண்டார் என்பது தெரியவில்லை. ஹர்பஜன் குறித்து விமர்சித்த போது சரியான வார்த்தையை தேர்ந்தெடுத்து பயன்படுத்த தவறிவிட்டேன். `உப்புக்கு சப்பாணி' என்பதற்கு பதிலாக வேறு வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கலாம்.

எனது 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சரிவை சந்தித்துள்ளேன். ஹர்பஜனை அவமானப்படுத்தும் நோக்கத்தில் நான் அப்படி சொல்லவில்லை. தற்போது ஹர்பஜனுடன் பேச விரும்புகிறேன். எங்களது உறவில் இதன்மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கு"மென்றும் ஹைடன் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
அவுஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி; இங்கிலாந்தின் ஹமில்டன் முதலிடம்
இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்டில் நியூஸிலாந்து 127 ஓட்டங்களால் தோல்வி
சென்னையில் நடைபெறும் முதல் டெஸ்ட்டுக்கான ரிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெறுகிறதுசி
ஹர்பஜனுடனான மோதல் குறித்து மிகவும் மனம் வருந்துகிறார் ஹைடன்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com