Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
அவுஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி; இங்கிலாந்தின் ஹமில்டன் முதலிடம்
[18 - March - 2008] [Font Size - A - A - A]
`போர்முலா 1' கார் பந்தயத்தின் முதல் சுற்றான அவுஸ்திரேலியன் கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் இங்கிலாந்தின் லூயிஸ் ஹமில்டன் முதலிடம் பிடித்தார்.

கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமானது `போர்முலா1' பந்தயமாகும். ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்தப்போட்டி 18 சுற்றுகளை கொண்டதாகும்.

போர்முலா 1 கார் பந்தயத்தின் முதல் சுற்றான அவுஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 11 அணிகளைச் சேர்ந்த 22 வீரர்கள் கலந்து கொண்டு மின்னல் வேகத்தில் காரை செலுத்தினார்கள்.

58 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில், தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த 23 வயதான இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹமில்டனே (மெக்கர்லென் அணி) பந்தயத்திலும் முதலிடம் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 34 நிமிடம் 50.616 வினாடியில் கடந்து 10 புள்ளிகள் பெற்றார்.

பி.எம்.டபிள்யூ அணி வீரர் நிக் ஹெட்பில்ட் (ஜேர்மனி) 2 ஆவது இடமும் வில்லியம்ஸ் அணி வீரர் நிகோ ரோஸ்பெர்க் (ஜேர்மனி) 3 ஆவது இடமும் ரெனால்ட் அணி வீரர் பெர்னாண்டோ அலோன்சா (ஸ்பெயின்) 4 ஆவது இடமும் பிடித்தனர். கடந்த முறை சாம்பியனான பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் (பெராரீ அணி) 8 ஆவது இடம் பிடித்து ஒரு புள்ளிகள் பெற்றார்.

இந்தியாவைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் இந்தியா அணிக்கு இந்தப் போட்டி மோசமாக அமைந்தது. அந்த அணியின் இரு வீரர்களில் ஒருவரது கார் விபத்தில் சிக்கியது. மற்றொருவரது கார் தொழில்நுட்ப பிரச்சினையால் பாதிக்கப்பட்டது.

Email this page Your Opinion Print this page
அவுஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி; இங்கிலாந்தின் ஹமில்டன் முதலிடம்
இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்டில் நியூஸிலாந்து 127 ஓட்டங்களால் தோல்வி
சென்னையில் நடைபெறும் முதல் டெஸ்ட்டுக்கான ரிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெறுகிறதுசி
ஹர்பஜனுடனான மோதல் குறித்து மிகவும் மனம் வருந்துகிறார் ஹைடன்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com