இங்கு இறந்த ஒருவரின் உடன்பிறப்புகள் ஐரோப்பாவில் பல்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள். இவர்கள் நல்ல வசதியாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
மரண அறிவித்தலை வெளியிடும்போது சகோதரங்களின் பெயர்களுக்கு எதிரே அவர்கள் வசிக்கும் நாடுகளை குறிப்பிடவேண்டாமென்று பலரும் அறிவுறுத்தியதால் அவ்வாறே அந்த அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இதுபற்றி அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குறிப்பிடுகையில் "அவர்கள் எந்த நாட்டில் வசிக்கிறார்கள் என்று விளம்பரத்தில் வந்தால்,அவரின் வீட்டிற்கே வந்து இலட்சக் கணக்கில் கப்பம் கேட்க முற்பட்டு விடுவார்கள். நாமாகவே கப்பக்காரர்களை வலிய அழைப்பது போலாகிவிடும்" என்று சொன்னார்.
இறப்பிலும்கூட ஈவிரக்கம் காட்டாதவர்களாச்சே, இந்தக் கப்பக்காரர்கள்!