Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
பங்களாதேஷில் காபந்து அரசு முறைகேடாக செயற்படுவதாக விசனம்
[19 - March - 2008] [Font Size - A - A - A]
பங்களாதேஷில் தற்போது அமைக்கப்பட்டுள்ள காபந்து அரசு முறைகேடாக செயல்பட்டு வருகிறது என கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் தலைவர் ஜம்முரூதீன் சிர்கார் தெரிவித்தார்.

டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது;

"காபந்து அரச சட்ட விரோத அரசு அல்ல. ஆனால், நிர்வாகம் சரியில்லாமல் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. நிர்வாகத்தில் நிலவி வரும் ஒழுங்கின்மை காரணமாக பல்வேறு செயல்பாடுகளில் தோல்வியடைந்துள்ளது. அதை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் உறுதிப்படுத்த முடியும்.

அரசியல் சட்டதிட்டத்தின்படி, காபந்து அரசு 90 நாட்களுக்கு தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஓராண்டாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. பக்ரூதீன் அகமது தலைமையிலான அரசு கடந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு முறையும் தேர்தலை ஒத்திப்போட்டு வருகிறது" என்றார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி பங்களாதேஷில் காபந்து அரசு அமைக்கப்பட்டது. தேர்தல் நடத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் வரை ஜம்முரூதீன் சிர்கார் பாராளுமன்ற தலைவராக நீடிப்பார்.

Email this page Your Opinion Print this page
திபெத் வன்முறைகளுக்கு தலாய் லாமாவே மூல காரணம்; சீனப் பிரதமர் குற்றச்சாட்டு
படிப்பு ஏறாததால் இராணுவத்தில் சேர்ந்ததாக கூறுகிறார் முஷாரவ்
பங்களாதேஷில் காபந்து அரசு முறைகேடாக செயற்படுவதாக விசனம்
எவரெஸ்ட் சிகரத்துக்கு ஏறுவதற்கு நேபாள அரசு தடை விதிப்பு
கலவரத்தை தொடர்ந்து வெளிநாட்டவர்கள் திபெத்துள் நுழைய சீன அரசு தடை
பாகிஸ்தான் பாராளுமன்றம் அருகே துவக்குடன் திரிந்தவர் கைது
பாகிஸ்தான் பாராளுமன்றம் கூடி புதிய எம்.பி.க்கள் பதவியேற்ற போதும் பிரதமர் இன்னமும் தெரிவாகவில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com