Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் கவலையளிக்கும் நிலையிலுள்ளது
[19 - March - 2008] [Font Size - A - A - A]
* ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் குறித்து இலங்கை அரசு வழங்கியுள்ள உறுதி மொழிகளை வரவேற்பதாகக் கூறிய ஐரோப்பிய ஒன்றியம் அதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில், பெரும் கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மனித உரிமை நிலைமைகள் குறித்து பல்வேறு கருத்துகளை அறிந்துகொள்வதற்காக இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று உறுப்பினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடாத்திய செய்தியாளர் மாநாட்டின்போதே இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தமது விஜயத்தின்போது அரச தரப்பில் மனித உரிமைகள் அமைச்சர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலதரப்பினருடன் மனித உரிமைகள் குறித்து ஆழமாகக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த இந்தத் தூதுக்குழுவின் தலைவரான ஸ்லோவேனியா, வெளியுறவு அமைச்சின் பணிப்பாளர் ஜான்ஸ் பிறிமோஸ் இம்முறை இந்த விஜயத்தின்போது அரசாங்கத் தரப்பும் இலங்கை மக்களிடமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நட்புறவு, ஆதரவு மற்றும் முக்கிய செய்திகளை தெரிவிப்பதற்காகவே வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து மிகவும் விசனமடைந்திருக்கின்றோம். அத்துடன், ஜனாதிபதியின் விசேட விசாரணை கமிசனின் விசாரணைகளை கண்காணித்து வந்த சர்வதேச பிரசித்தி பெற்ற நிபுணர்கள் குழு இந்த விசாரணைகள் சர்வதேச தரத்திற்கு அமைவானதாக அமையவில்லையென்றும், அமைப்பு ரீதியான ஆதரவு அதற்குக் கிட்டவில்லையென்றும் கூறி தமது கண்காணிப்புப் பணிகளை நிறுத்தி வெளியேறியிருப்பது குறித்து நாம் கவலையடைகின்றோம்.

சர்வதேச பிரசித்திபெற்ற நிபுணர்கள் குழுவினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் உயர்ஸ்தானிகர் விதந்துரைகளின்படி, இவ்வாறான சம்பவங்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்வதினூடாக சுயாதீன மனித உரிமைகள் கண்காணிப்பு இடம்பெறுவது தொடர்பில், அரசு உறுதியான முடிவை தரவேண்டும் என்பதை ஐரோப்பிய ஒன்றியமும் கோடிட்டுக்காட்ட விரும்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஜான்ஸ் பிறிமோஸ் தெரிவித்தார்.

ஆயினும் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளில் ஒன்றாக ஐரோப்பிய ஒன்றியம் தனது பணியினை ஆற்றிவரும் எனக்கூறிய அவர், சமாதான முயற்சிகளில் அனுசரணையாளர்களான நோர்வேயும் ஏனைய இணைத் தலைமை நாடுகளின் உறுப்பினர்களும் கிளிநொச்சி செல்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்தார்.

இது சமாதான முயற்சிகளுக்கு விடுதலைப் புலிகள் மீண்டும் திரும்ப வேண்டும் என்பது தொடர்பில் முக்கிய செய்திப் பரிமாற்றத்திற்கு மிக அவசியமென்றும் அவர் கூறினார்.

வன்முறைச் சம்பவங்களின்போது சிவிலியன்கள் பாதிக்கப்படுவதை சகல தரப்பும் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Email this page Your Opinion Print this page
பாதுகாப்பு நிலைவரம்; இராணுவத்தளபதி அமெரிக்கத்தூதுவருக்கு விளக்கமளிப்பு
மின்னல் தாக்கி 3 இளைஞர்கள் பலி
தள்ளாடி முகாம் மீது நீண்ட நேரம் தொடர்ந்து ஆட்லறி ஷெல் தாக்குதல்
மட்டு.உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற ஐ.ம.சு.மு., த.ம.வி.பு. உறுப்பினர்கள் 72 பேர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு
இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் கவலையளிக்கும் நிலையிலுள்ளது
இலங்கை பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு ஒரு போதும் சாத்தியப்படமாட்டாது
பிரான்ஸ் உள்ளூராட்சி தேர்தலில் 12 தமிழர்கள் வெற்றி
யுத்தத்தில் வெற்றிகொள்வது பெரிய விடயமல்ல பிரதான பிரச்சினைக்கு தீர்வு காண்பதே கேள்விக்குறி
மொனராகலையில் தமிழ் இளைஞன் வெள்ளைவானில் கடத்தப்பட்டார்
தமிழகத்தில் புலிகள் தளம் அமைத்து இருப்பதாக நாராயணன் கூறவில்லை
1 ரூபாவால் சிகரெட் விலை அதிகரிப்பு அரசுக்கு 150 கோடி ரூபா வருமானம்
மகேஸ்வரன் கொலை மார்ச் 27 விசாரணை
பூநகரி மீது கடும் ஷெல் தாக்குதல் ஒருவர் பலி; மாணவன் படுகாயம்
சாட்சியமளிப்பதற்காக நான் கொல்லப்படலாம் நீதி கிடைக்க வேண்டுமென்பதற்காக பயப்படவில்லை
மன்னாரில் படையினரின் முன்நகர்வு முயற்சிகள் முறியடிப்பு; 4 பேர் பலி
இலங்கைத் தமிழர் மீதான இராணுவ நடவடிக்கை அதிகரித்த போதும் இந்தியா மௌனம் காப்பதேன்?
களிமோட்டை பகுதியில் கிளைமோர் தாக்குதல்; இராணுவ வீரர் பலி
ரூபவாஹினி ஊழியரின் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை மேர்வினிடம் ஒப்படைத்திருந்தால் சிறப்பாக செய்திருப்பார்
சுதந்திரக் கட்சியை சீர்குலைக்க ரணிலும் சந்திரிகாவும் முயற்சி
விமர்சனங்களால் அவப்பெயரை தேடாத அரசியல்வாதியாக வாழ்ந்தவர் அநுரா
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது
கதிர்காமம் ஆலயம் அருகில் வெள்ளை நாகபாம்பு
2 இலட்சத்து 20 ஆயிரம் டொலர் பெறுமதியான பயங்கரவாதத்திற்கு எதிரான உபகரணங்கள்
ஹெப்பிட்டிகொலாவ -மணலாறுக்கிடையில் குண்டுதுளைக்காத தகடுகள் பொருத்திய பஸ்கள்
ஹந்தானை மலை உச்சியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு
கொழும்பு - புத்தளம் வீதியில் திடீர் வாகன சோதனை
ஊடகவியலாளரை அடக்கி ஒடுக்க வேண்டிய தேவை அரசிற்கில்லை
3 தமிழ்க்கட்சி பிரதிநிதிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள் சந்திப்பு
இ. போ. ச. ஊழியர்களுக்கு கையடக்க தொலைபேசிகள்
கட்டாக்காலி ஆடு, மாடுகளின் தொல்லை ஏறாவூரில் அதிகரித்துள்ளதாக விசனம்
இலங்கை - அமெரிக்க உறவில் பெரும் விரிசல் ஏற்படும் நிலை
`கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் மக்களை ஏமாற்றும் செப்படி வித்தை'
`வரதட்சணை கொடுமையை ஒழித்துக்கட்டுவதற்கு சமூகரீதியாக ஒன்றிணைந்து போராட வேண்டும்'
அரசியல் தலைமைத்துவம் சொந்த இடத்தில் பிறந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்
மக்களின் நலனை கருத்திற்கொள்ளாத அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்து ஐ.தே.க. ஆர்ப்பாட்டம்
குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட தலைமைகளின் செயற்பாடுகளே தொடரும் கொடூர யுத்தத்திற்கு காரணம்
பதுளை மாவட்டத்தில் கடும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com