கொட்டதெனியாவ வல்பிட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் 3 இளைஞர்கள் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டிருந்த வேளையிலேயே நேற்று மாலை இவர்கள் கடுமையான மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இதில், மூன்று இளைஞர்கள் உடல் கருகிப் பலியானதுடன், நால்வர் பலத்த காயங்களுடன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக பலத்த இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்து வருவதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.