Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
அமெரிக்க டெனிஸ் பெண்கள் ஒற்றையர் 4 ஆவது சுற்றுக்கு முன்னேறினார் சானியா
[19 - March - 2008] [Font Size - A - A - A]
அமெரிக்க டெனிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 4 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்காவில் உள்ள இன்டியன்வெல்ஸ் நகரில் பசிபிக் லைப் ஓப்பன் டெனிஸ் போட்டி நடந்து வருகிறது.

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-ஆவது சுற்று ஆட்டத்தில் உலக தர வரிசையில் 32-ஆவது இடத்திலிருக்கும் இந்திய இளம் வீராங்கனை சானியா மிர்சா,18-ஆவது இடத்தில் உள்ள இஸ்ரேல் வீராங்கனை ஷாகர் பீரை சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த சானியா,அடுத்த 2 செட்களையும் தனதாக்கி வெற்றி பெற்றார். முடிவில் சானியா மிர்சா 6-7,7-5,6-3 என்ற செட் கணக்கில் ஷாகர் பீரை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் முதல் நிலை வீராங்கனை அமெலி மவுரெஸ்மோ (பிரான்ஸ்) 1-6,2-6 என்ற நேர் செட்டில் உக்ரைன் வீராங்கனை அலோனா பொன்டாரெங்கோவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

மற்ற ஆட்டங்களில் மரியா ஷரபோவா (ரஷ்யா),டானிலா ஹன்ட்சோவா (சுலோவக்கியா), ஸ்வெட்லானா குனெட்சோவா (ரஷ்யா) அக்னிஸ்கா (போலந்து) ஆகியோர் வெற்றி பெற்று 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ஆவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஆண்டி ரோடிக் 4-6, 4-6 என்ற நேர் செட்டில் ஜேர்மனிய வீரர் டாமி ஹாஸ்சிடம் தோல்வியடைந்தார். மற்ற ஆட்டங்களில் ரோஜர் பெடரர் (சுவிற்சர்லாந்து),நிகோலாய் டாவ்டெங்கோ (ரஷ்யா), டேவிட் நல்பாண்டியன் (ஆர்ஜென்ரினா ),லெய்டன் ஹெவிட் (அவுஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-ஆவது சுற்று ஆட்டத்தில் லியாண்டர் பயஸ் (இந்தியா)-பால் ஹான்லே (அவுஸ்திரேலியா) ஜோடி 7-5,2-6,10-5 என்ற செட் கணக்கில் குலுலெர்மோகனாஸ் (அர்ஜென்ரீனா)- டேவிட் நல்பாண்டியன் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. மகேஷ்பூபதி (இந்தியா)- மார் நோலஸ் (பகாமஸ்) ஜோடி முதல் சுற்றில் 6-3,7-6 என்ற நேர் செட்டில் கிறிஸ்டோபர் ஹாஸ் (ஜேர்மனி) ரோஜர் வாசென் (ஹொலண்ட்) ஜோடியை வென்றது.

Email this page Your Opinion Print this page
மினி உலகக்கிண்ணப் போட்டி இலங்கைக்கு மாற்றப்படும் நிலை
முழங்கால் காயத்திலிருந்து ரொனால்டோ சிகிச்சைக்குப் பின் தேறி வருகின்றார்
மேற்கிந்தியாவுடனான போட்டித் தொடர் இளம் வீரர்களுக்கு மிகவும் வாய்ப்பாயிருக்கும்
தென்ஆபிரிக்காவுடனான முதலிரு டெஸ்ட் போட்டி இந்திய அணியில் காம்பீர், இஷாந்த் சர்மா நீக்கம்
அமெரிக்க டெனிஸ் பெண்கள் ஒற்றையர் 4 ஆவது சுற்றுக்கு முன்னேறினார் சானியா
பாகிஸ்தான் முன்னாள் கப்டன் இம்ரானின் இந்திய வருகை கடைசி நேரத்தில் ரத்து
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கப்டன் மரணம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com