பாகிஸ்தானில் உயிரிழந்த பொலிஸார் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின்போது நடைபெற்ற மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 38 பேர் பலியானார்கள். பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தப் பகுதியில் பொலிஸார் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது வீதியோரம் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து அதில் பயணம் செய்த 3 பொலிஸார் பலியானார்கள்.
இதில் பலியான பொலிஸார் ஒருவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 38 பேர் பலியானார்கள். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.