மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ஏற்கனவே 300 சிரேஷ்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாகவும் நேற்று சனிக்கிழமை 200 உதவித் தெரிவித்தாட்சி அதிகாரிகளுக்கு பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ள மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ரி.ஸ்ரீ.கிருஷ்ணானந்த லிங்கம், வாக்குச்சீட்டுகளை கணக்கிடும் 26 பிரதம அதிகாரிகளுக்கான பயிற்சி நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 பிரதேச சபைகளுக்கும் மட்டக்களப்பு மாநகர சபைக்கும் தேர்தல் இடம்பெறவுள்ளது. இத்தேர்தலில் 101 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.