Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இந்தியாவுடன் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கொழும்பு தீவிரம்
[02 - March - 2008] [Font Size - A - A - A]
*இராணுவத் தளபதி டில்லிக்கு 6 நாள் விஜயம்

இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கிறார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கிலேயே இவரது புதுடில்லி விஜயம் அமைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக இவரது இந்தியப் பயணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படாத போதும் தனது விஜயத்தின் போது லெப். ஜெனரல் சரத் பொன்சேகா இந்திய படை அதிகாரிகளுக்கு இலங்கை நிலைமைகள் குறித்தும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் விளக்கமளிப்பாரென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம், புதுடில்லியிலுள்ள `இந்தியா கேற்' வளாகத்தில் முதலாம் உலகப் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவுத் தூபிக்கும் சென்று அஞ்சலி செலுத்துவார். அதன் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தில் லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்.

இதேநேரம், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் இலங்கைப் படையினரின் கை ஒதுங்கியிருப்பதையே விரும்பும் இந்தியா, இலங்கைப் படையினர் பிடியை இழந்து வருவதை விரும்ப வில்லையென இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இதேநேரம், ்இலங்கையில் இரு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தியா மிகத் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அதாவது, இலங்கை இராணுவத்தின் கையே இலங்கைப் போரில் ஓங்கியிருக்க வேண்டுமென்பதும் சிறுபான்மையினர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டுமென்பதுமே அவையாகும்.

மேலும், இரு நாட்டுக் கடற்படையினரும், புலனாய்வுத் தகவல்களை வழங்குதல் உட்பட பல்வேறு விடயங்களிலும் இணைந்து செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
இந்தியாவுடன் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கொழும்பு தீவிரம்
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மனித உரிமை மீறல் தவிர்க்க முடியாதென இலங்கை கூறுவதை ஏற்கமுடியாது
தற்கொலைக்குண்டுதாரி வவுனியாவை சேர்ந்தவர்?
மட்டக்களப்பு தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி
பண்டிவிரிச்சான் பகுதி மோதலில் 11 படையினர் பலி; பலர் காயம்
கொள்ளையருக்கும் அடைக்கலம் கொடுப்போருக்கும் கடும் தண்டனை; வவுனியா நீதிபதி எச்சரிக்கை
2 தமிழர்களிடம் பணம், உடைமைகள் கோட்டை ரயில் நிலையத்தில் சூறை
பிரிட்டனுக்கு செல்வதற்கு இனிமேல் `புள்ளிகள்' தேவை
மாரவில மகாவெவயில் கிளைமோர் குண்டு மீட்பு
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோர் குறித்து பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் உறவினர்கள் முறையீடு
ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வு நாளை ஜெனீவா நகரில் ஆரம்பம்
பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரி உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்
இந்திய கடற்படையினரால் கைதான 21 மீனவர்கள் இன்று அழைத்து வரப்படுவர்
மத்தியகிழக்கு நாடுகளுக்கான சேவைகளை விஸ்தரிக்க ஸ்ரீலங்கா விமானசேவை தீர்மானம்
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடத்த அரசு திட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 60 பெண்களுக்கு தையல் இயந்திரம் அன்பளிப்பு
வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி தயாரத்ன
பாலையூற்று கொலை வழக்கில் எதிரிக்கு பத்துவருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு
இரவு உணவில் நச்சுத் தன்மை 45 பேர் ஆஸ்பத்திரியில்
வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பெயர்களை மீண்டும் பதிவு செய்ய நடவடிக்கை
வவுனியாவில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டதாக உறவினர் குற்றச்சாட்டு
மாணவர்குழுக்களுக்கிடையே மோதல்; ஒருவர் ஆபத்தான நிலையில்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com